சிகரம்
(முதல் பருவம்)
கல்வி கண் போன்றது. ஒருவரின் அறிவை வளர்ப்பதில் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கல்வி பற்றிய செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன. மனித உயிர்க்குக் கண்ணாகக் கருதப்படுவது கல்வியே என்பதைத் திருவள்ளுவர்,
’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்களாகப் போற்ற வேண்டிய கல்வியைக் கற்பிப்பவர் ஆசிரியர். ஆகவே தன் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்த காலத்தில் அதைத் தீர்க்க உதவி செய்ய வேண்டும். பணிவோடு நடந்துகொள்ளுதல் வேண்டும். நற்செயல்கள் அனைத்தையும் கடைப்பிடித்து, வெறுப்பின்றிக்கல்வியைப் பெறவேண்டும் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
கற்க வேண்டிய நூல்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர்களே அறிவுடையார் எனப்படுகின்றனர். அவ்வாறு கற்றோர் உலகின் எப்பகுதிக்கும் எளிமையாகச் செல்ல முடியும். கற்றோர்க்கு எல்லா நாடும் தம்நாடு போன்றதேயாகும். கல்வி கற்றோர் வழியில் உண்பதற்கு உணவுகூடக் கொண்டுசெல்ல வேண்டியதில்லை எனப் பழமொழி நானூறு கல்வி கற்றோரின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளது. இதிலிருந்து கற்றோர்க்கு அவர்கள் கற்றகல்வியே எல்லா நிலையிலும் துணையாக நிற்கும் என்பதைஅறிய முடிகிறது.
ஒரு நாட்டின் அரசரையும் குற்றம் நீங்கக் கற்றோரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கற்றோரே அரசரைக் காட்டிலும் சிறப்புடையவர். அரசருக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு இருக்கும். கற்றோருக்குத் தன் நாடு மட்டுமன்றி அவர்கள் செல்லும் எல்லா நாடுகளிலும் சிறப்புஉண்டாகும் என்றுமூதுரை குறிப்பிடுகிறது.
சமுதாயத்தை மேம்படுத்தும் ஆற்றல் உடையது கல்வி. புறத்தோற்றத்தில் வெளிப்படும் அழகெல்லாம் அழகல்ல. ‘கல்வி கற்றதனால் நான் நற்பண்பு உடையவன்' எனக் கருதும் மனநிலையே ஒருவருக்கு அழகு என்று நாலடியார் குறிப்பிடுகிறது. கற்பவருக்கு இன்பத்தைக் கொடுப்பது கல்வி. மற்றவருக்குக் கொடுக்க கொடுக்கக் குறையாமல் அதிகரிக்கும் பண்புடையது கல்வி. இது புகழைக் கொடுப்பது, அறியாமையைப் போக்குவது. அறியாமை நீங்கப்பெற்ற ஒருவர் பெறும் அழகே உண்மையான அழகாகும். இவ்வுண்மை அழகைப் பெறஉதவுவது கல்வியே.
தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதை உணர்ந்து பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். பாரதியார், கல்வி கற்ற பெண்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள புதுமைகளைக் கொண்டுவந்து தம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். சங்ககாலத்தில் பெண்பாற்புலவர்கள் பலர் இருந்துள்ளனர். இச்செய்தி அக்காலகட்டத்தில் பெண்கல்வி சிறப்புற்றிருந்தமையை உணர்த்துகிறது. இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் பெண்கல்வியில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்ட நிகழ்வுகளை அந்தந்தக் காலகட்டத்தில் எழுந்த இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர்கள் பெண்கல்விக்காக உரத்த குரலில் தங்கள் கருத்துகளைக் கவிதைகளாகப் பதிவு செய்துள்ளனர். தற்போது பெண்கல்வியில் நாம் சிறப்புற்றிருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.