சிகரம்
(முதல் பருவம்)
ஒரே சொல்லில் இந்த ஆறு உறுப்பும் அமையலாம். ஒன்றோ பலவோ குறைந்தும் வரலாம்.
எ.கா : வாழ்ந்தனர் = வாழ் + த் (ந்) + த் + அன் + அர்ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு பகுதி ஆகும். எனவே, இதனை ‘முதனிலை’ என்றும் வழங்கலாம். விகுதி பெறாத ஏவல் வினையாக வரும். பகுபதத்திலுள்ள பகுதி பொருள் உடையதாக இருக்கும். இது பெயர்ப்பகுதி, வினைப்பகுதியாக அமையும்.
பெயர்ப்பகுதி சான்று : வெற்பன் = வெற்பு - அன்இச்சான்றில் வெற்பு என்பது பெயர்ப்பகுதியாகும்.
வினைப்பகுதி சான்று : எழுதினார் = எழுதி + இன் + ஆர்இச்சான்றில் எழுது என்பது வினைப்பகுதியாகும்.
விகுதிபகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு விகுதி ஆகும். இதனை இறுதிநிலை என்றும் வழங்குவர்.
படித்தாள் என்னும் பகுபதத்தில் (படி + த் + த் + ஆள்) ஆள் என்பது விகுதி ஆகும். இது திணை (உயர்திணை), பால் (பெண்பால்), எண், (ஒருமை) இடம் (படர்க்கை) ஆகியவற்றைக் காட்டிநிற்கும்
ஆண்பால் விகுதிகள்அன், ஆன், மன், மான்
சான்று : வெற்பன் (அன்), வானத்தான் (ஆன்), சென்றான் (ஆன்), வந்தனன் (அன்) பெண்பால் விகுதிகள்அள், ஆள், தற்போது இ, ஐ என்ற விகுதிகளும் வருகின்றன.
சான்று : இவள் (அள்), குழலாள் (ஆள்), பொன்னி (இ), கோதை (ஐ), உண்டாள் (ஆள்) பலர்பால் விகுதிகள்அர், ஆர், மார்
சான்று : பெரியர் (அர்), ஓதுவார் (ஆர்), தேவிமார் (மார்) ஒன்றன்பால் விகுதி’து’ ஈற்றில் முடிவது ஒன்றன்பால் ஆகும்.
சான்று : அது, யாது, அஃது பலவின்பால் விகுதிகள்வை, அ, கள்.
சான்று : அவை (வை), கரியன (அ), கிளிகள் (கள்) இடைநிலைமுதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு இடைநிலை. பெரும்பாலும் காலம்காட்டும் உறுப்பாகவும், எதிர்மறைப் பொருள்தரும் உறுப்பாகவும் வரும்.
சான்று : கவிஞன் = கவி + ஞ் + அன் (பெயர் இடைநிலை)மேற்கண்ட சான்றில் – படி – முதனிலை (பகுதி); ப் – சந்தி; ப் - எதிர்கால இடைநிலை; ஆன் – இறுதிநிலை (விகுதி)
இந்த இடைநிலை இறந்தகால இடைநிலை, நிகழ்கால இடைநிலை, எதிர்கால இடைநிலை என மூன்றாகும்.
இறந்தகால இடைநிலை - த், ட், ற், இன்இது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சில நேரங்களில் வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி.
சான்று : நடத்தல் = நட + த் + தல்பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.
சாரியைஇது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும்.
சான்று : நடந்தனன் = நட + த் (ந்) + த் + அன் + அன்இங்கு இடைநிலைக்கும் (த்) விகுதிக்கும் (அன்) இடையில் அமைந்திருக்கும் ‘அன்’ சாரியை ஆகும்.
சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றி உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.
விகாரம்விகாரம் என்பது தனி உறுப்பு இல்லை. பகுதி, விகுதி, முதலான உறுப்புகள் சேர்தலால் ஏற்படும் மாற்றத்தை விகாரம் என்கிறோம்.
சான்று : கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்காண் என்னும் பகுதி கண் என விகாரப்பட்டது. பகுதி தொழிலை உணர்த்தும் ஏவலாக இருக்கும். மூன்று காலங்களுக்கும் ஒன்றே ஆகையால் ‘காண்’ என்பதே பகுதியாக இருக்கவேண்டும்.
சான்று : நடந்தான் = நட + த் (ந்) + த் + ஆன்இதில் ‘நட’ என்னும் பகுதியை அடுத்துள்ள சந்தி ‘த்’ ஆகும். இச்சந்தியைத் திரிக்காமல் எடுத்துக்கொண்டால் ‘நடத்தான்’ என்று கூற வேண்டும். ஆனால் நடந்தான் என்பது சொல்லாகையால் ‘த்’ என்னும் சந்தி ‘ந்’ எனத் திரிந்து வந்துள்ளது.