சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.5 கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

மீனாட்சி சுந்தரனார் கல்வி நிறுவனம்

48 நாட்கள் நடைபெற்றது (17 + 28 + 3)

தொட்டுத் தொட்டுப் பார்த்தால் அது வெறும் காகிதம், தொடர்ந்து படித்தால் அதுவே வெற்றியின் ஆயுதம்.

10%

காலை 11.00 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 மணிக்கு நிறைவடையும்.

தகவல் துளி

இல்லம் தேடிக் கல்வி

இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் கொரோனா பேரிடர்க் காலங்களில் கல்வி பாதிப்படையக் கூடாது என்ற நோக்கத்தால் உருவாக்கப்பட்டது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைத்தது. முறையான கல்வித்தகுதியுடன் பயிற்சி பெற்ற 2 லட்சம் தன்னார்வலர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களுக்குக் கதை, ஆடல்-பாடல், நாடகம், விளையாட்டு, பொம்மலாட்டம் ஆகிய செயல்பாடுகள் மூலம் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மூலம் தமிழ்நாடெங்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது.