சிகரம்
(முதல் பருவம்)
வை.மு.கோதைநாயகி தமிழகத்தைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் எனப் பன்முகம் கொண்டவர். இவரைச் சமகால எழுத்தாளர்கள், ‘நாவல் ராணி’, ’கதா மோகினி’, ’ஏக அரசி’ என்று போற்றினர். இவர் 115 புதினங்களை எழுதியுள்ளார். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.
பத்திரிகை ஆசிரியரும், நூற்றுக் கணக்கான புதினங்களை எழுதியவருமான வை.மு.கோதைநாயகிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பிறகு எப்படி எழுத்துலக முதல்வராக மாறினார்? அவர் அனைவரையும் ஈர்க்கும் விதமாகக் கதை சொல்வார். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இவரது கதைகளை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார்கள். ’அருமையாக இருக்கின்றன. இதையெல்லாம் அப்படியே புத்தகமாகப் போடலாமே’ என்று தெரிந்தவர் ஒருவர் ஆலோசனை தந்தார். ஏன் செய்யக் கூடாது என்று கோதைநாயகிக்குத் தோன்றியது. அவர் சொல்லச் சொல்ல, பக்கத்து வீட்டுப் பெண் பட்டம்மாள் அதை அப்படியே எழுதினார். அவரது முதல் நாடக நூலான ‘இந்திர மோகனா’ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது கதை ‘வைதேகி’யைத் தானே தன்னுடைய கையெழுத்தில் எழுதிவிட வேண்டும் என்ற வேகம் பிறந்தது கோதைநாயகிக்கு. ஒரு தீர்மானமாக எடுத்துக்கொண்டு, சில மாதங்களிலேயே தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். தனது அடுத்த நாவலைத் தானே எழுதிக் காட்டினார். சில எழுத்துப்பிழைகள் வந்தன. அதுபற்றியெல்லாம் அவர் பயப்படவில்லை. தகுந்த ஒருவரை வைத்துப் பிழைகளைத் திருத்திக்கொண்டார். இவ்வாறு பல தொடர் முயற்சிகளால் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் வை.மு.கோதைநாயகி அவர்கள்.
இந்திர மோகனா
சமகால எழுத்தாளர்கள் இவரை ‘நாவல் ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்று போற்றினர்.
வை.மு.கோதைநாயகி தமது முதல் புதினத்தை பக்கத்து வீட்டுப் பெண் பட்டம்மாளை வைத்து எழுதினார்.
இரண்டாவது புதினமான ’வைதேகி’யைத் தானே தன்னுடைய கையெழுத்தில் எழுதினார்.
வை.மு.கோதை நாயகி தமிழகத்தைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் எழுத்தாளர். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் எனப் பன்முகம் கொண்டவர்.