சிகரம்
(முதல் பருவம்)
திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படைப் பண்புகள். இவை சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவும். தமிழ் மொழியில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்துகின்றன.
இத்தொடரில், வேலன் என்னும் எழுவாய் அதன், திணை, பால், இடம், எண் ஆகியவற்றை உணர்த்திவிடுகிறது. மேலும், இந்த எழுவாய் தான் பெற வேண்டிய வினைமுற்றை உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை எனப் பொருத்தமுடன் அமையுமாறு வேண்டி நிற்கிறது. இதன்மூலம் எழுவாய்க்கும் பயனிலைக்கும் நெருங்கிய இயைபு இருத்தலை அறியலாம்.
திணை, பால் - விகுதிகள்
எண், இடம் – விகுதிகள்