சிகரம்
(முதல் பருவம்)
தொழிற்பாடல்கள் என்பது நாட்டார் பாடல்களில் ஒன்றாகும். பொதுவாகத் தொழில்புரியும்போது பாடும் பாடல்களைத் தொழிற்பாடல்கள் என்பர். தொழிலின் சுமையும் உழைப்பின் களைப்பும் தெரியாமல் இருக்க இவ்வகைப் பாடல்களைப் பாடுகின்றனர்.
தொழிலாளர்கள் உழைக்கும்போது, உடற்சோர்வைப் பொருட்படுத்தாமலும் விரைவாகப் பணிபுரியவும் தொழிற்பாடல்கள் உதவுகின்றன. தொழிற்பாடல்கள் பொதுவாக, ஏற்றப்பாடல், ஏர்ப்பாடல், நடவுப்பாடல், களை எடுப்புப்பாடல், அறுவடைப் பாடல், மீன்பிடிப்பாடல் என்று தொழிலுக்கு ஏற்றவாறு பாடப்படுகின்றன. இப்பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களாக அறியப்படுகின்றன. வாய்மொழி இலக்கியமாக இருந்த இவை நாளடைவில் தனிஇலக்கிய வகையாகவே உருவெடுத்துள்ளன.
தொழிற்பாடல்கள் சில இசைக் குறியீடுகளுடன் தொடங்குகின்றன. வேளாண் பாடல்களில் “ஏலேலோ குயிலே”, “ஏலேலோ அன்னக்கிளி”, “ஏலேலோ குயிலே”, “பொலி பொலி பொலி” என்றும், கப்பற்பாட்டுகளில் “ஏலேலோ ஐலசா”, “ஏலை ஏலோ சல சலா” என்றும், சுமை துாக்குவோர்கள் “ஐலசா ஐலசா”, “ஏலம் பிடி ஏலம்” என்றும், வண்டியோட்டுவோர்கள் “ஏலங்கிடிலேலோ” என்றும் பாடுவர்.
தொழிற்பாடல்கள்
தொழிலாளர்கள் உழைக்கும்போது, உடற்சோர்வைப் பொருட்படுத்தாமலும் விரைவாகப் பணிபுரியவும் தொழிற்பாடல்கள் பாடப்படுகின்றன.
ஏற்றப்பாடல், ஏர்ப்பாடல், நடவுப்பாடல், களையெடுப்புப்பாடல், அறுவடைப்பாடல், மீன்பிடிப்பாடல் என்று தொழிலுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.
கப்பற்பாடல்களின் குறியீடு “ஏலேலோ ஐலசா”, “ஏலைஏலோ சல சலா”
தொழிற்பாடல்கள் தனி இலக்கிய வகையாக அறியப்படுகின்றன.
ஆஸ்திரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று உள்ளது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம். இந்திய வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையான ஒப்பந்தம் இதுவே, இந்த ஒப்பந்தம் கிரேக்க மொழியில் உள்ளது. எனவே, இந்த வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் வணிகனுக்குக் கிரேக்க மொழி தெரிந்திருந்தது என்பது தெளிவாகிறது. இது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் நகல் கரூர் அருங்காட்சியகத்திலும் உள்ளது. |
|