சிகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் பாடலைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.
| “அரியதோர் ஓடம் செலுத்திடும் அன்பனே! பரிவுடன் என்முகம் பார்த்து நீ அதனில் ஏற்றியே அக்கரை சேர்க்கவும் இசைவாய் வேற்று வாகனங்கள் மிகப்பல உளவே? அவையெலா(ம்) ஏறிநான் அலுத்தனன் ஆற்றினைத் தவறிலா(து) இம்முறை தாண்டவே விழைந்தேன் உறுதியாய் நின்றால் உதவிடும் ஓடம் வருகநீ யானும் மகிழ்ந்தனம் உள்ளம் எத்தனை எத்தனை இன்பமீன் இங்கே மெத்தக் களிதரும் வேடிக்கை எத்தனை சற்றுநான் ஆற்றில் தாவியே திளைப்பேன்” பெ.தூரன் |
|
கவிஞர் அன்பனே என்று ஓடக்காரனை அழைக்கிறார்.
கவிஞர் அக்கரைக்குப் போக விரும்பினார்.
மகிழ்ச்சி எனும் பொருள் தரும் வேறு சொற்கள் விழைவு, இன்பம், களி, திளைப்பு
பரிவு என்ற சொல்லின் பொருள் இரக்கம்.
மூன்று முறை வந்துள்ள சொல் எத்தனை ஆகும்.
கடல் வணிகம் நடைபெறும் சூழலை வரைபடமாக வரைந்து, வகுப்பில் காட்சிப்படுத்துக.