சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.5 கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

தேசிய அளவிலான நெல் திருவிழா – 2023

08.06.2023 மற்றும் 09.06.2023 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், நுகர்வோர்கள் ஆகியோர் நெல் திருவிழாவில் பங்கேற்கலாம்.

இத்திருவிழா 13 ஆண்டுகளாக நடைபெறுகிறது.

பேரணி, கண்காட்சி, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

தகவல் துளி

ஈரோடு மாவட்டம், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் கொடுமணல். இவ்வூர் சங்க இலக்கியத்தில் ’கொடுமணம்’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் சங்ககாலம் முதலே வெளிநாட்டவர் பலரும் கூடும் பெரும் வணிக நகரமாக இருந்துள்ளது. இதனைப் பல்வேறு புறச்சான்றுகள் மூலம் நாம் அறிகிறோம். கொடுமணலில் குதிரை வணிகம் பெருமளவு நடைபெற்றிருப்பதை இங்குக் கிடைக்கும் சான்றுகள் புலப்படுத்துகின்றன. கார்னீலியன், அகேட், ஜாஸ்பர், பெரில் முதலான அரியவகை மணிகள் இங்கு ஆயிரக்கணக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை உரோமானியர்களே பெருமளவில் விரும்பிப் பயன்படுத்தியுள்ளனர். உரோம் நாட்டு நாணயங்கள், கருப்பு சிவப்பு நிறம் கொண்ட சங்ககாலத்தைச் சேர்ந்த பானைகள். நிகம, வியாகி போன்ற பிறமொழி எழுத்துகள் பொறித்த பானைச் சில்லுகள் கிடைத்துள்ளன.