சிகரம்
(முதல் பருவம்)
”உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால் அதனைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்” என்ற வரிகளுக்குச் சொந்தமானவர் ரத்தன் நவால் டாடா.
தனது தொழில் திறமையால் உலகையே இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்த தொழிலதிபர் இவர். இந்தியாவில் தொடங்கிய தனது வியாபாரக் குழுமத்தினை, இன்று உலகெங்கிலும் எடுத்துச் சென்றுள்ளார். நாம் சாப்பிடும் உணவில் போடும் உப்பில் தொடங்கி, தேநீர், கைக்கடிகாரம், தங்கம், நம் வீட்டுச் சுவரில் உள்ள இரும்பு, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி என ஒவ்வொன்றிலும் டாடாவின் பங்கு உண்டு. இப்படிப் பல துறைகளில் வெற்றிகரமாய் கோலோச்சி வருபவர் இவர்.
1937இல் சூரத் நகரில் நவால் டாடா சுனு தம்பதியருக்கு மகனாகப் பிறந்த ரத்தன் டாடா, தனது நிர்வாக மேல்படிப்பை ஹார்வார்டு பல்கலைக்கழக்கத்தில் படித்துள்ளார். அங்கு அவர் படிப்பை முடித்தவுடன் இன்றளவும் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கும் ஐபிஎம்மில் (IBM) பணிக்குச் சேர்ந்துள்ளார். எனினும் தாய்நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக இந்தியாவுக்கே திரும்பினார். 30 ஆண்டு அயராத கடின உழைப்பினால் 1991இல் டாடா குழுமத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் நியமிக்கப்பட்டார்.
இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு முன்னோடியாக இருந்து வரும் ரத்தன் டாடா, தொழில் நுணுக்கங்களையும் இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறார். இவர் கொடைத்தன்மை உடையவர். ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல லட்சம் பேருக்குத் தமது தொண்டு நிறுவனம் மூலமாக இன்றளவிலும் பல உதவிகளைச் செய்து வருகின்றார். கொரோனா நிவாரண நிதியாக 1,500 கோடி ரூபாயினை இந்திய மக்களுக்காக வழங்கியவர் டாடா.
ரத்தன் டாடா
ரத்தன் டாடா சூரத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்தார்.
30 ஆண்டுகள்
ரத்தன் டாடா ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.
உப்பு, தேநீர், கைக்கடிகாரம், தங்கம், இரும்பு, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி என ஒவ்வொன்றிலும் டாடாவின் பங்கு உண்டு. இவை யாவும் டாடா குழுமத்தின் தயாரிப்புகள் ஆகும்.