சிகரம்
(முதல் பருவம்)
உணவுத்திருவிழா
சென்னை
சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை – 69
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 23.08.2023 புதன் கிழமை அன்று நடைபெறுகிறது
இயற்கை – காட்டுயிர் இதழ் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.
19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை வெளியான வெகுசன இலக்கியம் ’குஜிலி இலக்கியம்’. தொடக்கத்தில், மக்கள் தங்களின் துயரங்களை வெளிப்படுத்த எடுத்துக்கொண்ட ஓர் ஊடகமே குஜிலி இலக்கியம். இது நாட்டார் மக்களால் செய்திகளைப் பாடலாகக் கூறிய வழக்காகும். பின்னர் அனைத்தையும் பாடுபொருளாக எடுத்துக்கொண்டது. குஜிலி இலக்கியம், ‘பெரிய எழுத்துப் புத்தகங்கள்’, ‘காலணா’, ’அரையணா பாட்டுப் புத்தகங்கள்’, ’தெருப்பாடல்கள்’ என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. குஜிலி என்ற பெயர் குச்சிலி என்ற பெயரிலிருந்து திரிபாக வந்ததாகும். குச்சிலி புத்தகங்கள் என்பது மருவி குஜிலி புத்தகங்கள் என வழங்கப்பட்டது. இந்தப் பாடல்களில் எழுதியோர், பாடியோர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. சென்னையின் கானாப் பாடல்களின் முந்தைய வடிவமே குஜிலிப் பாட்டு.