சிகரம்
(இரண்டாம் பருவம்)
இத்தொடர் உணவை உண்டான் என விரிந்து பொருள் தருகிறது. இரு சொற்களுக்கு இடையில் ’ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரவில்லை. மறைந்து வந்துள்ளது.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
இது, வேற்றுமை உருபு மட்டும் மறைந்துவருதல், வேற்றுமை உருபும் பயனும் சேர்ந்து மறைந்துவருதல் என இரண்டு வகைப்படும்.
| வேற்றுமை | வேற்றுமை உருபு | வேற்றுமைத் தொகை | வேற்றுமை விரி | உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
| முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை) | உருபுகள் இல்லை | செடி வளர்ந்தது (செடி – எழுவாய்) | ||
| இரண்டாம் வேற்றுமை | ஐ | பால் குடித்தான் | பாலைக் குடித்தான் | பால் குடம் (பாலை உடைய குடம்) |
| மூன்றாம் வேற்றுமை | ஆல், ஆன், ஒடு, ஓடு | தலை வணங்கினான் | தலையால் வணங்கினான் | பொன் வளையல் (பொன்னால் செய்த வளையல்) |
| நான்காம் வேற்றுமை | கு | என் மகள் | எனக்கு மகள் | குழந்தைப் பால் (குழந்தைக்குக் கொடுக்கும் பால்) |
| ஐந்தாம் வேற்றுமை | இன், இல் | ஊர் நீங்கினான் | ஊரின் நீங்கினான் | மலை அருவி (மலையில் இருந்து வரும் நீர்) |
| ஆறாம் வேற்றுமை | அது, ஆது | நண்பன் வீடு | நண்பனது வீடு | வருவதில்லை |
| ஏழாம் வேற்றுமை | கண் | மலைக் கோயில் | மலைக்கண் கோயில் | தண்ணீர்ப் பாம்பு (தண்ணீர்க்கண் வாழும் பாம்பு) |
| எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை) | உருபுகள் இல்லை | கந்தா வா |