சிகரம்
(இரண்டாம் பருவம்)
கலைநிகழ்ச்சிகள் தை 1 தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெறுகின்றன.
மதுரை இளைஞர் குழுவினர்
கலைநிகழ்ச்சிகள் ஜனவரி 16, 17 ஆகிய நாள்களில் நடைபெறுகின்றன
பறையிசை, கரகம், ஒயிலாட்டம், துடும்பு, நாட்டுப்புறக் கலைகள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கலைநிகழ்ச்சிகள் மதுரை, நேரு பூங்காவில் நடைபெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கலாம்.
ஆடி மாதம் 18ஆம் நாளன்று ‘ஆடிப்பெருக்கு’ விழா கொண்டாடப்படுகிறது. இது இயற்கையை வணங்கும் தமிழர்தம் பண்பாட்டு விழா. ’ஆடிப்பெருக்கு விழா’ என்பது தமிழர்களின் நீர் வழிபாட்டு விழா ஆகும். தமிழ்நாட்டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, காவிரி ஆற்றுப் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழாவைப் ’புதுப்புனல் விழா’ எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆடிப்பெருக்கு நாளன்று அதிகாலையிலேயே மக்கள் புத்தாடை அணிந்து ஆற்றங்கரைகளுக்குச் செல்வர். அங்கே தம் வாழ்வின் ஆதாரமாக உள்ள ஆற்றில் மலர் தூவியும் விளக்கேற்றியும் வழிபடுவர். தாம் கொண்டுசெல்லும் காப்பரிசியை (அரிசி, வெல்லம், எள், தேங்காய் ஆகியவற்றின் கலவை) பிறரோடு பகிர்ந்துண்டு மகிழ்வர்.