சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.6 கேட்டல் கருத்தறிதல்

கீழ்க்காணும் கடிதத்தைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

தாத்தா, பாட்டியின் 60ஆம் ஆண்டுத் திருமண விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஓவியா தன் அத்தைக்கு அனுப்பும் மின்னஞ்சல்.

21-06-2023
சென்னை 25, இந்தியா.

அன்புள்ள அத்தைக்கு,

அன்புள்ள அத்தைக்கு, ஓவியா எழுதுவது, இங்கு அனைவரும் நலம். உங்களின் நலமறிய ஆவல். நீங்கள் தாத்தா, பாட்டியின் 60ஆம் ஆண்டுத் திருமண விழாவிற்கு ஏன் வரவில்லை? நம் குடும்ப உறவினர் அனைவரும் கலந்துகொண்டனர். உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தோம். இந்நிகழ்வு நம் உறவுகள் ஒன்றிணைய நல்வாய்ப்பாய் அமைந்தது. திருமணத்திற்கு முதல் நாளன்று நான், அக்கா, தம்பி, தங்கைகள் அனைவரும் வீட்டை அலங்கரித்தோம். கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டி இருவரும் இத்திருமண விழாவிற்குத் தலைமை ஏற்றனர். இல்வாழ்க்கை அதிகாரத் திருக்குறள் வாசிப்புடன் திருமண நிகழ்வு தொடங்கியது. மணமக்களான தாத்தா பாட்டிக்கு அனைவரும் திருமணப் பரிசுகளை வழங்கினர். திருமண விழாவில் பங்கேற்றவர்களை 16 செல்வங்களும் பெற்று வாழுமாறு தாத்தாவும் பாட்டியும் வாழ்த்தினர். பின்னர் நடைபெற்ற விருந்தில் தமிழ்நாட்டு உணவு வகைகள் வாழையிலையில் பரிமாறப்பட்டன. திருமணத்திற்கு வருகைபுரிந்தோருக்கு நன்றிகூறி, திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தாத்தாவும் பாட்டியும் தங்களது 60ஆம் ஆண்டுத் திருமண நிகழ்வில், 60 மரக்கன்றுகளை நட்டனர். உறவுகளோடு ஒன்றுகூடி இருப்பதே பெருமகிழ்வுதான். இத்திருமணவிழாவால் நம் குடும்ப உறவுகளின் அன்பையும் அருமையையும் உணர முடிந்தது. அடுத்த முறை நம் குடும்ப விழாவில் தவறாது கலந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி அத்தை.

பாசமுள்ள ஓவியா.

வினாக்கள்

தாத்தா பாட்டியின் 60ஆவது திருமண விழா கொண்டாடப்பட்டது.

உறவுகளோடு ஒன்றுகூடி இருப்பதே பெருமகிழ்வு என ஓவியா கருதினாள்.

கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டி இருவரும் திருமணவிழாவிற்குத் தலைமை ஏற்றனர்.

இல்வாழ்க்கை அதிகாரம்

60 மரக்கன்றுகள்