சிகரம்
(இரண்டாம் பருவம்)
நாம் பேசும்போதும் எழுதும்போதும் இலக்கண நெறியைப் பின்பற்ற வேண்டும். இதனை வழாநிலை என்பர். அந்நெறிகளிலிருந்து பிறழும்போது அதனை வழுநிலை என்பர். இப்பகுதியில் ஏழு வகைகளில் ஏற்படும் வழுநிலை குறித்தும் அவற்றின் வழாநிலை குறித்தும் காண்போம்
உயர்திணை/அஃறிணையைப் பயன்படுத்தித் தொடர் அமைக்கும்போது அத்திணைக்கு உரிய வினையைக் கொண்டுதான் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் அது திணைவழுவாகும்.
| வழு | வழாநிலை | |
| சான்று | அக்கா வந்தது | அக்கா வந்தாள் |
ஐந்து பால்களுக்கு உரிய பெயர்கள் எழுவாயாகவோ வினை நிகழ்த்தும் பொருளாகவோ வரும்போது, அவற்றிற்கான வினை அவற்றிற்கு உரிய பாலில் அமையாமல் வேறு பாலில் அமைதல் வழுவாகும்.
| வழு | வழாநிலை | |
| சான்று | அறிஞர்கள் வந்தான் | அறிஞர்கள் வந்தனர் |
மூவிடங்களில் ஒன்றின் இடத்திற்கு உரிய எழுவாய், சொற்றொடரில் இடம்பெறும்போது பயனிலை அதற்குரியதாக அமையாமல் வேறு இடத்திற்கு உரியதாக அமையுமானால் வழுவாகும்.
| வழு | வழாநிலை | |
| சான்று | நீ பாடினேன் | நீ பாடினாய் |
ஒரு காலத்திற்குரிய வினையை வேறு காலத்தில் கூறுவது வழுவாகும்.
| வழு | வழாநிலை | |
| சான்று | நேற்றுச் சாப்பிடுவான் | நேற்றுச் சாப்பிட்டான் |
வினாவின் எழுவாயாக வரும் பெயர்களின் திணை, பால் ஆகியனவும் வினாப் பயனிலைகளில் வரும் திணை, பால் ஆகியனவும் மாறி வருதல் வழுவாகும்.
| வழு | வழாநிலை | |
| சான்று | அங்கே வருகிறவன் ஆணா? பெண்ணா? | அங்கே வருபவர் ஆணா? பெண்ணா? |
விடையில் இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறுபட்டு வரும் விடைத் தொடர்கள் விடை வழுநிலைத் தொடர்கள் எனப்படும்.
| வழு | வழாநிலை | |
| சான்று | அங்கே வருகிறவன் பெண் | அங்கே வருகிறவன் ஆண் |
முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினர் என அறியாமல், அதற்கு மாறுபட வழங்குவது மரபு வழுவாகும்.
| வழு | வழாநிலை | |
| சான்று | மயில் கூவியது | மயில் அகவியது |