சிகரம்
(இரண்டாம் பருவம்)
தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. பழங்காலந்தொட்டுக் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தமிழர்கள் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுநர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.
தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் இயல்பாய்க் கூறப்பட்டிருப்பதிலிருந்து, கடலைத் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகத் தமிழர்கள் அமைத்துக்கொண்டதை அறிகிறோம். ‘நாவாய் சாத்திரம்’ என்பது 18ஆம் நூற்றாண்டில் கப்பற்கலை பற்றி வெளிவந்த தமிழ் நூல் ஆகும். கடலின் இயற்பியல் மாற்றங்கள், அவை நிகழும் பருவங்கள், அதன்படி கலங்களைச் செலுத்துதல் பற்றிய தகவல்களை இந்த நூல் தருகிறது. கப்பல் அல்லது மரக்கலம் என்பதற்கு மற்றுமொரு சொல் ’நாவாய்’ ஆகும்.
சங்ககாலம் தொட்டே தமிழர்கள் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில்நுட்பத்தில் ஒன்று ‘ஓதம் அறிதல்’. ஓதத்தைக் (Tide) கழி ஓதம் (Tide towards the Shore - High Tide), கடல் ஓதம் (Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர். கழி ஓதத்தின்போது கடல் நீரானது கரையை நோக்கி நகரும். ஓதம் குறையும்போது கடலை நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதுதான் கப்பல்களைக் கடலுக்குள் செலுத்துவர். இவ்வாறு கப்பல் கட்டுதல் முதல் கப்பல் செலுத்துதல் வரையிலான பல்வேறு தொழில்நுட்பங்களை ’நாவாய் சாத்திரம்’ பேசுகிறது.
நாவாய்
நாவாய் சாத்திரம்
பழங்காலந்தொட்டுக் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தமிழர்கள் தேர்ந்து விளங்கினர்.
ஓதம் அறிதல் என்பது தமிழர்கள் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில்நுட்பம் ஆகும்.
ஓதத்தின் பிரிவுகள் இரண்டாகும். அவை, ஓதத்தைக் கழி ஓதம், கடல் ஓதம்.
30 வயதில் மூளைச்சாவு அடைந்த ஆன் ஜான்சன் என்ற பெண்மணி, பக்கவாதத்தால் முடக்கப்பட்டார். 48 வயதுவரை அவரால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத சூழலில், இப்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரைப் பேசவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆன் ஜான்சனின் மூளையில் பேச்சுச் செயல்பாட்டுடன் தொடர்புடைய பகுதிகளோடு 250க்கும் மேற்பட்ட மின்முனைகள் பொருத்தப்பட்டு, இவை கணினியுடன் இணைக்கப்பட்டன. பின்னர், ஆன் ஜான்சனின் குரலை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக ஒரு அவதார் உருவாக்கப்பட்டது. ஆன் ஜான்சன் என்ன பேச வேண்டுமென நினைக்கிறாரோ அதை இந்த அவதார் பேசும். ஆன் ஜான்சன் போன்ற நபர்கள் சக மனிதர்களுடன் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான தொழில்நுட்பமாக இது திகழ்கிறது.