சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.6 கேட்டல் கருத்தறிதல்

நிகோலா டெஸ்லா
(1856 - 1943)

நிகோலா டெஸ்லா 1856 ஆம் ஆண்டு குரோஷியாவில் பிறந்தார். இளம் வயதிலேயே டெஸ்லா அங்கிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். புகழ்பெற்ற அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசனிடம் பணிபுரிய 1884இல் அவர் நியூயார்க் வந்தார்.

மின்சார, இயந்திரவியல் பொறியாளராக அவர் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்துவைத்தபோது, அவரது பைகளில் இரண்டு சென்ட்களும் பறக்கும் இயந்திரத்தை உருவாக்குவதற்கான செய்முறைக் கணக்கும் மட்டும்தான் இருந்தன. ஆனால், டெஸ்லாவைப் பிரபலப்படுத்தியது அந்தப் பறக்கும் இயந்திரம் அன்று.

உலகம் வேகமாக வளர்ந்துவந்த நிலையில் அதிக மின்னாற்றல் தேவைப்பட்டது. விளக்குகளை ஒளிரச்செய்யவும் இயந்திரங்களை இயக்கவும் பயனுள்ள வழியைக் கண்டறிவதற்கான தேவை அதிகமானது. இந்தப் பின்னணியில், மின்சாரக் கடத்தலுக்கு மாற்று மின்னோட்டம் பயன்படுத்தப்பட வேண்டுமா அல்லது நேரடி மின்னோட்டம் பயன்படுத்தப்பட வேண்டுமா என்பதை நிறுவ அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், தாமஸ் ஆல்வா எடிசன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. எடிசனின் நிறுவனம் நேரடி மின்னோட்டத்தில் முதலீடு செய்தது. ஆனால், மாற்று மின்னோட்டத்தை டெஸ்லா வலியுறுத்தியதால், இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. ஐரோப்பாவில் டெஸ்லா பணிபுரியும்போதே மாற்று மின்னோட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டிருந்தார். மேலும், 1883 இலேயே தமது முதல் மோட்டாரை உருவாக்கியிருந்தார். நெடுந்தூர மின் பரிமாற்றங்களில் மாற்று மின்னோட்ட முறையே சிறந்ததாகத் திகழ்ந்ததால், டெஸ்லா உலகப் புகழ்பெற்றார்.

வினாக்கள்

நிகோலா டெஸ்லா 1856ஆம் ஆண்டு குரோஷியாவில் பிறந்தார்.

மின்சாரக் கடத்தலுக்கு மாற்று மின்னோட்டம் பயன்படுத்த வேண்டுமா அல்லது நேரடி மின்னோட்டம் பயன்படுத்த வேண்டுமா என்பதை நிறுவ அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், தாமஸ் ஆல்வா எடிசன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

எடிசனின் நிறுவனம் நேரடி மின்னோட்டத்தில் முதலீடு செய்தது.

டெஸ்லா 1883ஆம் ஆண்டு தமது முதல் மோட்டாரை உருவாக்கினார்.

நெடுந்தூர மின் பரிமாற்றங்களில் மாற்று மின்னோட்ட முறையே சிறந்ததாகத் திகழ்ந்ததால், டெஸ்லா உலகப் புகழ் பெற்றார்.