சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.5 கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

இந்தியாவில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதிக்கு விபத்து நடந்தது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள உள்ளூர் மக்கள்.

இரத்தம் வழங்கிய இளைஞர்களுக்கும் உதவிய உள்ளூர் மக்களுக்கு இந்திய பிரதமர் நன்றி கூறினார்

இந்த செய்தி வெளியான நாள் 03 June 2023.

தகவல் துளி

பண்டைய தமிழ் மொழியில் நிறுத்தற்குறியிடும் வழக்கம் இல்லை. தமிழில் சொற்களே, நிறுத்தச் சொல்லாகவும் விட்டிசைச் சொல்லாகவும் முற்றுச் சொல்லாகவும் வினாச்சொல்லாவும் விளியாகவும் இருந்துள்ளன. பழங்ககாலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடலை எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் சுழியம் இடுதல் (O), இணைகோடுகள் இடுதல் (//) அல்லது கோடு இடுதல் (/) என்னும் வழக்கம் இருந்துள்ளது. எனினும், தமிழ் மொழி உரைநடைக்குத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டபோது பல்வேறு வகையான நிறுத்தற்குறிகள் பயின்றுவரத் தொடங்கின. இன்று தமிழ்மொழியின் இலக்கண நெறிகளுக்கு ஏற்ப, சொற்றொடர்களைப் பிரித்துப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள நிறுத்தற்குறிகள் உதவுகின்றன.