சிகரம்
(இரண்டாம் பருவம்)
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. இந்தக் காப்பியத்தின் தலைவி மணிமேகலை. இவரின் பெயராலேயே இவ்விலக்கியம் இப்பெயர் பெற்றது. இவர் சிலப்பதிகாரக் காப்பியத்தில் வரும் கோவலன் மற்றும் மாதவியின் மகளாவார். தமது கருத்துகள் மூலம் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றியவர்.
ஆபுத்திரன் என்பவர் இவருக்கு அட்சயப்பாத்திரத்தை வழங்கினார். அனைத்தையும் வழங்கும் தன்மை கொண்டது அட்சயப்பாத்திரம். இருப்பினும், பிற உயிர்களின் பசியைத் தீர்ப்பதற்காகவே அட்சயப்பாத்திரத்தைப் பயன்படுத்தினார். அறம் எனப்படுவது மண்ணுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறைவிடமும் கொடுப்பதே என்கிறார் மணிமேகலை. அதாவது உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைக் கொடுப்பதே அறம் என்கிறார். இளமையும் உடலும் செல்வமும் நிலையானவை அல்ல; அறம் ஒன்றே நிலையானது என்கிறார். பசி ஒழிப்பு, மது ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சிறை ஒழிப்பு போன்ற பல சீர்திருத்தங்களைப் பேசுபவராக மணிமேகலை காட்டப்பட்டுள்ளார்.
மணிமேகலை
ஆபுத்திரன்
மணிமேகலை உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைக் கொடுப்பதே அறம் என்கிறார்.
பசி ஒழிப்பு, மது ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சிறை ஒழிப்பு, போன்ற பல சீர்திருத்தங்களைப் பற்றி மணிமேகலை கூறியுள்ளார்.
மணிமேகலை பிற உயிர்களின் பசியைத் தீர்ப்பதற்காகவே அட்சயப் பாத்திரத்தைப் பயன்படுத்தினார்.