பா வகை அறிமுகம்
முற்காலத்தில் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவத்திலேயே எழுதப்பட்டன. சொல்ல வரும் கருத்துக்கேற்ற ஓசை வர வேண்டும் என்பதற்காகப் பா வகைகள் தோன்றின. அவை நான்கு வகைப்படும்.
- அறிவுரை சொல்ல வெண்பா (செப்பலோசை)
- கதை சொல்ல ஆசிரியப்பா (அகவலோசை)
- மகிழ்ச்சியை வெளிக்காட்ட கலிப்பா (துள்ளலோசை)
- மென்மையாகச் சொல்ல வஞ்சிப்பா (தூங்கலோசை)
இப்பாடப் பகுதியில் வெண்பாவின் இலக்கணம், ஆசிரியப்பாவின் இலக்கணம் குறித்து அறிந்துகொள்வோம்.
வெண்பா –இலக்கணம்
- கடைசி அடி மூன்று சீராகவும், பிற அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீராகவும் வரும்.
- இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்.
- இயற்சீரும் வெண்சீரும் பெற்று வரும்.
- இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் பெற்று வரும்.
- கடைசிச் சீர் நேர் என முடிந்தால் நாள் வாய்பாட்டிலும், நிரை என முடிந்தால் மலர் என்னும் வாய்பாட்டிலும் முடியும். இதுபோலவே காசு, பிறப்பு வாய்பாடுகளும் பெற்றுவரும்.
சான்று:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (குறள் : 664)
விளக்கம்:
- மேற்கண்ட வெண்பாவில் முதல் அடி நான்கு சீராகவும் இறுதி அடி மூன்று சீராகவும் அமைந்துள்ளன.
- இப்பாடல் இரண்டடிகளால் அமைந்துள்ளது.
- சான்றில் உள்ள பாடல் இயற்சீரையும் இயற்சீர் வெண்டளையும் பெற்றுவந்ததைக் கண்டுகொள்க.
- இப்பாடலில் ‘செயல்’ என்ற கடைசிச் சொல் ’நிரை’ என முடிந்திருப்பதால் ’மலர்’ வாய்பாட்டைப் பெற்றுள்ளது.
| சொல் |
அசை |
சீர் |
தளை |
|
| சொல்/லுதல் |
நேர்/நிரை |
கூவிளம் |
விளம்முன்நேர் |
இயற்சீர் வெண்டளை |
| யார்க்/கும் |
நேர்/நேர் |
தேமா |
இயற்சீர் வெண்டளை |
|
| எளி/ய |
நிரை/நேர் |
புளிமா |
மாமுன்நிரை |
இயற்சீர் வெண்டளை |
| அரி/யவாம் |
நிரை/நிரை |
கருவிளம் |
விளம்முன்நேர் |
இயற்சீர் வெண்டளை |
| சொல்/லிய |
நேர்/நிரை |
கூவிளம் |
விளம்முன்நேர் |
இயற்சீர் வெண்டளை |
| வண்/ணம் |
நேர்/நேர் |
தேமா |
மாமுன்நிரை |
இயற்சீர் வெண்டளை |
| செயல் |
நிரை |
மலர் |
|
|
வெண்பா வகைகள்
- குறள் வெண்பா
- சிந்தியல் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
ஆசிரியப்பா (அகவற்பா)
- எல்லா அடிகளும் நான்கு சீர்களில் வரும்.
- ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
- ஆசிரியத்தளை மிகுதியாக வரும்; வெண்டளை, கலித்தளைகளும் அருகி வரலாம்.
- மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும். ’ஏ’ என்ற எழுத்தில் முடித்தல் சிறப்பு. ஓ, ஈ, ஆய், என், ஐ ஆகிய ஈறுகளாலும் முடியும்.
சான்று:
| ஈன்று |
புறந்தருதல் |
என்தலைக் |
கடனே |
| சான்றோன் |
ஆக்குதல் |
தந்தைக்குக் |
கடனே |
| வேல்வடித்துக் |
கொடுத்தல் |
கொல்லற்குக் |
கடனே |
| நன்னடை |
நல்கல் |
வேந்தற்குக் |
கடனே |
(புறநானூறு:312)
ஆசிரியப்பாவின் வகைகள்
- நேரிசை ஆசிரியப்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- அடிமறிமண்டில ஆசிரியப்பா