சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.5 கருத்து விளக்கப்படம் & தகவல் துளி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

குமரன் கல்வி நிறுவனம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தமிழ்மொழியுடன் செயல்படுத்துவதற்கான பன்னாட்டுக் கருத்தரங்கம்

இந்தக் கருத்தரங்கத்தின் மூலம், தமிழ் மொழியையும் தற்கால தொழில் நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் விதமாகச் செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழித் தமிழ் கற்றல், மொழிபெயர்ப்பு, இயற்கை மொழிப் பகுப்பாய்வு என ஏராளமான தலைப்புகளில் உள்ள தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

நிகழ்வு 13 மற்றும் 14 அக்டோபர் 2023 ஆகிய இரு நாள்கள் கோயம்புத்தூர், குமரன் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்கலாம்.

தகவல் துளி

கபசுரக் குடிநீர்

சுக்கு, திப்பிலி, லவங்கம் உட்பட 15 மூலிகைகளால் தயாரிக்கப்படுவது கபசுரக் குடிநீர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கபசுர சூரணத்தை நன்கு கொதிக்கவைத்துப் பின்னர் பருக வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் கபசுரக் குடிநீரைப் பருகலாம். கபசுரக் குடிநீர் பருகுவதால் எந்தவிதப் பக்கவிளைவும் ஏற்படாது. இருதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், கருவுற்ற பெண்கள் உட்பட அனைவரும் கபசுரக் குடிநீரைப் பருகலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனா போன்ற கொடிய பெருந்தொற்றுக் காலத்தில்கூட நோய் தணிக்கக் கபசுரக் குடிநீர் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.