சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.6 கேட்டல் கருத்தறிதல்

வாசிப்பு

வாசிப்பு என்பது நம்மைப் புதுப்பித்துக்கொள்வதற்கு உதவும் ஒரு காரணி. அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக வாசிப்பு இருக்க வேண்டும். புத்தகம் வாசிக்கும் வழக்கம் வாழ்நாளை அதிகரிக்கும் என ஏல் பல்கலைக்கழக ஆய்வு முடிவு கூறுகிறது. மனிதப் பரிணாம வளர்ச்சியில் புத்தக வாசிப்பின் மூலம் ஒருவர் பெற்றுக்கொள்ளும் அறிவு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. புத்தக வாசிப்பு மனிதரிடத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, அமைதியையும் பொறுமையையும் இடர்களைச் சமாளிக்க வல்ல அனுபவங்களையும் பேச்சாற்றலையும் தர வல்லது. அறிவு, திறன், தன்னம்பிக்கை போன்றவற்றையும் புத்தக வாசிப்பு தரும்.

வாசிப்பவர் அடையும் நன்மைகள், அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். இதற்கு அறிஞர்கள், தலைவர்கள், அறிவியலாளர்கள் என அனைவரும் சான்றாக உள்ளனர். ’மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது?’ எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்ன பதில், “புத்தகம்.” வாசிப்பு மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும். அலட்சியங்களையும் அவமானங்களையும் எளிதில் கடந்துசெல்ல உதவும். “போதும் என்று நொந்துபோய்ப் புது வாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்” என்கிறார் இங்கர்சால். நாமும் நம் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கப் புத்தகங்கள் வாசிக்கப் பழகுவோம்.

வினாக்கள்

வாசிப்பு

ஏல் பல்கலைக்கழகம்

புத்தகமே மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஆகும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறினார்.

புத்தக வாசிப்பு மனிதரிடத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, அமைதியையும், பொறுமையையும் இடர்களைச் சமாளிக்க வல்ல அனுபவங்களையும் பேச்சாற்றலையும் தர வல்லது. அறிவு திறன், தன்னம்பிக்கை போன்றவற்றையும் புத்தக வாசிப்பு தரும்.

“போதும் என்று நொந்துபோய்ப் புது வாழ்வைத் தேடுகிறீர்களா ……. ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குகள்” என்று புத்தக வாசிப்புக் குறித்து இங்கர்சால் கூறுகின்றார்.