சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.6 கேட்டல் கருத்தறிதல்

நெல் ஜெயராமன் (1968 - 2018)

நெல் ஜெயராமன் தம் வாழ்நாளை வேளாண்மைக்கும் மரபு நெல் வகைகளை மீட்டெடுப்பதற்கும் அர்ப்பணித்தவர். இவர் தமிழ்நாட்டில் மிக ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நஞ்சில்லா மரபு விவசாயம் பற்றிய ஆர்வம் கொண்டிருந்தவர். அதனால், இயற்கை வேளாண்மையின் முன்னோடியான நம்மாழ்வாருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். நம்மாழ்வாருக்குப் பக்கபலமாக இருந்தவர்களுள் முக்கியமானவர் நெல் ஜெயராமன். தாம் மேற்கொண்ட வேலையைச் சிரமப்பட்டேனும் முடித்துவிடும் பேராற்றல் கொண்டவர்.

ஜெயராமன் தாம் நடத்திய நெல் திருவிழாவில் ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்தினார். அதாவது, நெல் திருவிழாவில் ஒரு விவசாயிக்குக் கொடுக்கப்படும் இரண்டு கிலோ மரபு விதைநெல்லைப் பயிரிட்டு விளைவித்து அடுத்த ஆண்டு நடைபெறும் நெல் திருவிழாவில் நான்கு கிலோவாகத் திரும்பக் கொடுக்க வேண்டும். இந்தச் சிறப்பான உத்தியால் வியக்கும் வேகத்தில் மரபு நெல் உற்பத்தி தமிழ்நாடெங்கும் பரவ ஆரம்பித்தது.

இவர் பயணிக்காத நாள்களே இருக்காது. மரபு நெல் வகைகளை மீட்டெடுக்க எப்போதும் எந்த ஊருக்காவது பேருந்தில் பயணித்தபடியேதான் வாழ்ந்தார். இவர் தமது கடும் உழைப்பால் 174 மரபு நெல் வகைகளை மீட்டெடுத்தார். இவரது அரிய பணியைக் கண்டு வியந்து மகிழ்ந்த நம்மாழ்வார், இவருக்கு ’நெல் ஜெயராமன்’ எனப் பெயர் சூட்டினார்.

வினாக்கள்

நெல் ஜெயராமன் மரபு நெல் வகைகளை மீட்டெடுப்பதற்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தார்.

நம்மாழ்வார்.

174 மரபு நெல் ரகங்களை மீட்டெடுத்தார்.

நெல் ஜெயராமன் மரபான நெல்வகைகளை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுமைக்கும் பயணித்தார்.

ஜெயராமன் தாம் நடத்திய நெல் திருவிழாவில் ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்தினார். அதாவது நெல் திருவிழாவில் ஒரு விவசாயிக்குக் கொடுக்கப்படும் இரண்டு கிலோ மரபு விதைநெல்லை பயிரிட்டு விளைவித்து அடுத்த ஆண்டு நடைபெறும் நெல் திருவிழாவில் நான்கு கிலோவாகத் திரும்பக் கொடுக்க வேண்டும். இந்த சிறப்பான உத்தியால் வியக்கும் வேகத்தில் மரபு நெல் உற்பத்தி தமிழ் நாடெங்கும் பரவ ஆரம்பித்தது.