சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.5 கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம்.

இணையம் வாயிலாக பயிலரங்கம் நடத்தப்பட்டது

பயிலரங்கம் எட்டு நாள் நடைபெற்றது.

நவீன காலத் தமிழ்க் கணினியின் வளர்ச்சியும் அதன் புதிய நுட்பங்களும்

கணினி மொழியியலில் இலக்கணம் மொழியியல் துறைகளின் பங்கு.
உலகெங்கும் கணினித் தமிழின் தற்போதைய போக்கு.
கணினித் தமிழுக்குப் பயன்படும் உருபனியல் கூறுகள்.
தமிழ் நூல்களுக்கு ஏற்றவாறு use case தேவைப்படும் கூறுகள்.
கல்வெட்டுத் தமிழுக்கு முழுமையான இலக்கணக் குறிப்புடன் விரிதரவினை உருவாக்குதல்.
தமிழ் சார்ந்த கணினிப் பொறுமையியல்.
தமிழ் மின் நூலகம் சவால்களும் வாய்ப்புகளும்.

தகவல் துளி

உலக மனிதநேய நாள்

ஆகஸ்டு 19ஆம் நாளை உலக மனிதநேய நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. உலகம் முழுவதும் பல நல்ல மனிதர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் பொருட்படுத்தாமல், பிறரின் துயர் நீக்கப் போராடுகிறார்கள். அவர்களின் மனிதநேயம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே 'உலக மனிதநேய நாள்’. ஒருமுறை, ஐ.நா.வும் அதன் கூட்டு அமைப்புகளும் முக்கியமான ஒரு வேண்டுகோளை முன்வைத்தன. அதாவது, உலக அளவில் உயிர்வாழ உதவி வேண்டி, 13 கோடிப் பேர் உள்ளனர் என ஆய்வறிக்கைகள் வாயிலாகத் தெரியவருகிறது. அவர்கள் அனைவருக்கும் வாழ உலகமே ஒன்றிணைந்து உதவ வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. உலக மனிதநேய நாள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.