சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.4 தெரிந்துகொள்வோம்

வேர்ச்சொல்

பிரிக்க இயலாத, பிற சொற்கள் உருவாகக் காரணமாயுள்ள அடிப்படையான சொல்லே வேர்ச்சொல் எனப்படும்.

எடுத்துக்காட்டாக: வளை, வளையம், வளையல், வடை, வட்டம், வட்டு, வட்டில், வடம் போன்ற சொற்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது வள் என்பதாகும். எனவே இச்சொற்களின் வேர்ச்சொல் வள் ஆகும். வேர்ச்சொற்களுடன் ஒட்டுகள் சேரும்போது பல்வேறு சொற்கள் உருவாகின்றன.

ஒரு வேர்ச்சொல்லிலிருந்து பல்வேறு சொற்கள் உருவாவதை இந்த அட்டவணையில் காணலாம்.

வேர்ச்சொல் பெயரெச்சம் வினையெச்சம் வினை முற்று தொழில் பெயர் அடுக்குத் தொடர்
படி படித்த் படித்து படித்தான் படித்தல் படி படி
தா தந்த தந்து தந்தான் தருதல் தா தா
நில் நின்ற நின்று நிற்பான் நிற்றல் நில் நில்
கேள் கேட்ட கேட்டு கேட்டான் கேட்டல் கேள் கேள்
காண் கண்ட கண்டு காண்கிறார் காணல் காண் காண்

வேர்ச்சொல் வினைமுற்றாக வரும்போது திணை, பால் விகுதிகளை எவ்வாறு பெற்று வருகிறது என்பதைக் காணலாம்.

வேர்ச்சொல் அசை கல் வில்
உயர்திணை ஆண்பால் அசைந்தான்
அசைகிறான்
அசைவான்
கற்றான்
கற்கிறான்
கற்பான்
விற்றான்
விற்கிறான்
விற்பான்
உயர்திணை பெண்பால் அசைந்தாள்
அசைகிறாள்
அசைவாள்
கற்றாள்
கற்கிறாள்
கற்பாள்
விற்றாள்
விற்கிறாள்
விற்பாள்
உயர்திணை பலர்பால் அசைந்தனர்
அசைகிறார்
அசைவார்
கற்றனர்
கற்கின்றனர்
கற்பார்
விற்றனர்
விற்கிறார்
விற்பார்
அஃறிணை ஒன்றன்பால் அசைந்தது
அசைகிறது
அசையும்
கற்றது
கற்கிறது
கற்கும்
விற்றது
விற்கிறது
விற்கும்
அஃறிணை பலவின்பால் அசைந்தன
அசைகின்றன
அசையும்
கற்றன
கற்கின்றன
கற்கும்
விற்றன
விற்கின்றன
விற்கும்