முகப்பு

தொடக்கம்

2

‘மெய்ப்பாடு--மெய்க்கட்பட்டு விளங்குந் தோற்றம்’ என்பர் வீரசோழியகாரரும்.

சொற்பொருளால் வேறுபடினும் வரைவிலக்கணங்களை உற்று நோக்கும்போது யாவர் கருத்தும் ஒன்றாகும்.

இனி, நாடகநூலார் கூறிய மெய்ப்பாட்டுப் பொருள்கள் முப்பத்திரண்டென்றும், அவை பதினாறாயும், அப்பதினாறும் எட்டாயும் அடங்குமென்றுந் தொல்காப்பியனார் கூறுவர்.

மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டாவன: சுவைக்கப்படு பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும் அது மனத்துப்பட்ட வழி உள்ளத்து நிகழுங் குறிப்பும், அக்குறிப்புக்கள் தோன்றிய உள்ளங் காரணமாக உடம்பின்கண் வரும் வேறுபாடாகிய சத்துவங்களும் என்னும் நான்கனோடும் மெய்ப்பாடு எட்டையும் உறழ முப்பத்திரண்டு பொருளாம்.

சுவைப்பொருளாவன : நகை முதலிய சுவைக்குக் காரணமாகிய பொருள்கள்.

சுவையாவது : நகை முதலிய சுவைக்குரிய பொருள்களும் சுவைப்போனுடைய பொறியுங் கூடியவழி நிகழு மனவுணர்ச்சி. இதுபற்றியே,

“இருவகை நிலத்தி னியல்வது சுவையே.”

என்றார் பிறரும். இச்சுவையைக்குறித்துப் பேராசிரியர் உரைக்கு மிடத்து, “இருவகை நிலத்தி னியல்வது சுவையே” என்னுஞ் சூத்திரத்துள் இருநிலமென்பன உய்ப்போன் செயலுங் காண்போனறிவும் என்னும் இரண்டிடமும் என்று பொருள் கூறுவார் கருத்தை மறுத்து, இருநிலமென்பன சுவைக்கப்படு பொருளுஞ் சுவைப்போனுமென்னும் இரண்டிடமுமே என்று நாட்டியுரைத்தலின் அவருரையையும் விளங்குதற்பொருட்டு ஈண்டுக் காட்டுதும். அது வருமாறு:--

“இனி இருவகை நிலமென்பன உய்ப்போன் செய்தது காண்போற்கெய்துதலன்றோவெனின், சுவையென்பது ஒப்பினானாய பெயராகலான் வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பறி வினை நாவுணர்வினாற் பிறனுணரான், இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணுணர்வினான் அறிவதன்றி. அதுபோல, அச்சத்துக்கு ஏதுவாகிய ஒருபொருள் கண்டு அஞ்சி ஓடிவருகின்றா

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்