xxxviii

 காக்கை பாடினியம், காரைக்காற்பேயார் பாடல், காலகேசி, குடமூக்கிற பகவர்பாடல், குண்டலகேசி, குமர சேனாபதியார் கோவை, குறுந்தொகை, குறுவேட்டுவச் செய்யுள், கையனார் பாடல், கொன்றைவேந்தன், கோவை, சங்க யாப்பு, சந்திர கோடி சந்தம், சந்தோ பிசிதிகள், சாணாச்சிரயம், சிந்தாம சிலப்பதிகாரம், சிறுகாக்கை பாடினியம், சூளாமணி, செயதேயம், செயன்முறை, செயிற்றியம், செய்யுளியல், தக்காணியம், தத்துவ தரிசனம், தமிழ் முத்தரையர் கோவை, தாரணை நூல், திணைநூல், திருக்குறள், திருமந்திரம், தேசிகமாலை, தொல்காப்பியம், நக்கீரர் நாலடி, நானூற்று வண்ணம், நல்லாறனார் நூல், நற்றத்தம், நாலடி நாற்பது, நாலடியார், நான்மணிக் கடிகை, நீலகேசி, பட்டினப்பாலை, பத்தினிச் செய்யுள், பரணர் செய்யுள், பரிமாணனார் பாடல், பல்காயம், பனம்பாரம், பன்மணி மாலை, பன்னிரு படலம், பாக்கனார் பாடல், பாடலனார் பாடல், பாட்டியல், பாட்டியல் மரபு, பாரதம், பிங்கலகேசி, பிங்கலம், புட்கரனார் பாடல், புராண சாகரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, பூதத்தார் பாடல், பெரியபம்மம், பெருஞ்சித்திரனார் பாடல், பெருந்தலைச் சாத்தனார் பாடல், பெருந்தேவபாணி, பெருவல்ல வெண்பா, பெருவள நல்லூர் பாசண்டம், மயேச்சுரர் யாப்பு, பொய்கையார் வாக்கு, மதுரைக் காஞ்சி, மந்திர நூல், மலை படுகடாம், மாபிங்கலம், மாபுராணம், மார்க் கண்டேயனார் காஞ்சி, மிச்சாகிருதி, முதுமொழிக் காஞ்சி, முத்தொள்ளாயிரம், மும்மணிக் கோவை, யாப்பருங்கலக் காரிகை, யாப்பியல், லோகவிலாசனி, வடுகச் சந்தம், வளையாபதி, வாசுதேவனார் சிந்தம், வாஞ்சியார் நூல், வாய்ப்பியம், விளக்கத்தனார் பாடல் இன்ன பல நூல்களையும் பாடல்களையும் எடுத்துக் காட்டி விளக்கிச் செல்லும் விரிவுரையாசிரியர் மாண்பு, தனிப் பேராராய்ச்சி மேற் கொள்ளப் பெற்றுத் தனி நூலாக்க வேண்டிய ஒன்றேயாம். கட்டுரை யளவில் சில சில துளிகளைத் தெளிக்கலா மேயன்றி முற்றக் காட்டுதற்கு இயலாது என்பது வெளிபடை.

இவர்தம் உரைப்போக்கு ஓர் ஒழுங்கு பெற்றது. முதற்கண் நூற்பாவைக் குறித்து, ‘என்பது என் நுதலிற்றோ