முகப்பு தொடக்கம்

பது, இருபத்தொன்பது, இருபத்துநாலு, முப்பத்துமூன்று, நாற்பத்தெட்டு, முப்பத்தேழு, பத்தொன்பது, முப்பத்தாறு, எனத் திணையும் துறையுமாக விரித்து வெண்பாமாலையாகிய வழிநூலுள் ஐயனாரிதனார் கூறியதூஉம்' (மாறனலங்காரம், சூ. 76, உரை) என்பதிலும் நொச்சிக்குப்பின் உழிஞையை வைத்த முறையே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நூலின் உரை பதவுரையாக மட்டும் இருப்பதன்றிப் பெரும்பாலும் அந்வயித்து எழுதப்படவில்லை. பதவுரையின்பின் முடிபுகள் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன. அம்முடிபுகளிற் சில வினாவி விடையிறுக்கு முறையில் அமைந்துள்ளன. இலக்கணக் குறிப்பு முதலியன மிகுதியாகக் காணப்படவில்லை. இது பெரும்பாலும் வடசொற்கள் பயின்றதாக அமைந்துள்ளது. இவ்வுரை இல்லையாயின் இந்நூலின் அருமை பெருமைகளும் பாடல்களின் பொருள்களும் நன்கு புலப்படா.

**இவ்வுரையை எழுதிய ஆசிரியர்+ஜயங்கொண்ட சோழமண்டலத்து மேற்கானாட்டுமாகறலூர்கிழார்சாமுண்டி தேவநாயகரென்பவர் அவருடைய பெயரால்அவர் வேளாண் மரபினரென்பது பெறப்படுகிறது. 

இந்நூலின்முதன் மூன்று பதிப்புக்கள் முறையே 1895, 1915, 1924 - ஆம் வருஷங்களில் வெளியாயின. அவற்றைப்பற்றிய வரலாறுகள் அவ்வப்பதிப்புக்களின் முகவுரைகளால் விளங்கும்.

எனக்குக் கிடைத்த ஏட்டுப்பிரதிகளுள் திருநெல்வேலி ஹிந்து காலேஜ் தமிழ்ப் பண்டிதராகவிருந்த ஸ்ரீ சுவர்ணம் பிள்ளை யவர்கள் தந்த பிரதியிலிருந்து வேறு பிரதிகளில் உரையில்லாத சில பகுதிகட்குரிய உரைகிடைத்தது. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ தே. லக்ஷு மண கவிராயரவர்கள் வீட்டுப் பிரதியொன்றன்இறுதியில் "803 - ஆம்ஆவணி 11-ம்உ வெண்பாமாலை எழுதிமுடிந்தது" என்பதும், ஆழ்வார் திருநகரிப் பிரதிகளுள் ஒவ்வொன்றன் முதலிலும்,

"தேன றாமகிழ்த் தொடையலு மவுலியுந் திருக்கிளர் குழைக்காதும் 
கான றாமலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயும் 
மோன மாகிய வடிவமு மார்பமு முத்திரைத் திருக்கையும் 
ஞான தேசிகன் சரணதா மரையுமென் னயனம்விட் டகலாவே"

என்னும் அருமைச் செய்யுளும், வேறொரு பிரதியில், "சீயர் திருவடிகளே சரணம்; வைத்தியநாத குருவேநம: பெரிய திருவடி குருவே நம: 877 - ஆம் மார்கழி சதுர்த்தசியும் புதன்கிழமையும் உரோகிணியும் பெற்ற சுபதினத்திலே இரத்தின கவிராசர் வெண்பாமாலையுரை எழுதி முற்றும்" என்பதும் வரையப் பெற்றிருந்தன.

இப்புத்தகத்துள் பிரதிபேதங்கள் அவ்வப்பக்கங்களின் கீழே குறிக்கப்பட்டுள்ளன. இந்நூல் வெண்பாக்கள் முதலியவை மேற்கோளாக


**. செந்தமிழ், முதற்றொகுதி, பக்கம் 45-6 பார்க்க. 

+. தொண்டைநாடு

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்