எடுத்தாளப்பட்ட இடங்களும் ஒப்புமைப் பகுதிகள் முதலியனவும் அவ்வப்பக்கத்தில் அடிக்குறிப்புக்களாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலுள் ஒவ்வொரு படலத்திலும் கூறப்பட்ட பொருளமைப்பின் சுருக்கம் வசனமாக எழுதி, படிப்போர்க்குப் பயனுறும் வண்ணம் இப்பதிப்பிற் சேர்க்கப்பட்டுள்ளது.வழக்கம்போல் இப்பதிப்பிற்கும் உடனிருந்து ஒப்புநோக்குதல் முதலிய உதவிகளைச்செய்த அன்பர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்படி செய்வித்தருளும் வண்ணம் ஸர்வேசுவரனைப் பிரார்த்திக்கின்றேன். "தியாகராஜ விலாசம்" திருவேட்டீசுவரன் பேட்டை சென்னை 24-12-34. | } | இங்ஙனம், வே. சாமிநாதையர் | குறிப்பு இந்நூலின் நான்காம் பதிப்பு எனது பாட்டனாராகிய டாக்டர் ஐயரவர்களால் 1934 ம் ஆண்டில் அச்சிடப்பெற்றது. அவர்களுடைய முகவுரையால் இந்நூலைப் பற்றிய செய்திகளை அறியலாம். அவ்வப்பொழுது கிடைத்த குறிப்புக்கள் உரிய இடங்களில் இப்பதிப்பில் சேர்க்கப் பெற்றுள்ளன. இப்பதிப்பு திருத்தமாக வெளிவருவதற்கு உதவி புரிந்த சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. s. சீனிவாசன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். சென்னை - 5 22-9-1962. | } | இங்ஙனம் க. சுப்பிரமணியன் | |