முகப்பு |
இளந்திரையனார் |
94. நெய்தல் |
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில், |
||
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்; |
||
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி- |
||
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ |
||
5 |
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் |
|
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் |
||
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின் |
||
ஆர்வம் உடையர் ஆகி, |
||
மார்பு அணங்குறுநரை அறியாதோனே! | உரை | |
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்
|
99. முல்லை |
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை, |
||
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின், |
||
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் |
||
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர |
||
5 |
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று, |
|
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் |
||
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- |
||
பிடவமும், கொன்றையும் கோடலும்- |
||
10 |
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. | உரை |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்
|