முகப்பு |
ஒளவையார் |
129. குறிஞ்சி |
பெரு நகை கேளாய், தோழி! காதலர் |
||
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் |
||
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச் |
||
செல்ப என்ப, தாமே; சென்று, |
||
5 |
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை |
|
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை- |
||
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப, |
||
படு மழை உருமின் உரற்று குரல் |
||
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.-ஒளவையார்
|
187. நெய்தல் |
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக, |
||
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய, |
||
பல் பூங் கானலும் அல்கின்றன்றே; |
||
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி, |
||
5 |
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, |
|
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு |
||
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட |
||
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின், |
||
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு |
||
10 |
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? | உரை |
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.-ஒளவையார்
|
295. நெய்தல் |
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின், |
||
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல் |
||
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள், |
||
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை, |
||
5 |
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, |
|
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை, |
||
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம் |
||
இள நலம் இற்கடை ஒழியச் |
||
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம்.- ஒளவையார்
|
371. முல்லை |
காயாங் குன்றத்துக் கொன்றை போல, |
||
மா மலை விடர் அகம் விளங்க மின்னி, |
||
மாயோள் இருந்த தேஎம் நோக்கி, |
||
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய், |
||
5 |
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: |
|
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி, |
||
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர், |
||
குழல் தொடங்கினரே கோவலர்- |
||
தழங்கு குரல் உருமின் கங்குலானே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்
|
381. முல்லை |
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப் |
||
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்; |
||
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை |
||
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல, |
||
5 |
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை |
|
யாங்கனம் தாங்குவென் மற்றே?-ஓங்கு செலல் |
||
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி, |
||
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க, |
||
தேர் வீசு இருக்கை போல, |
||
10 |
மாரி இரீஇ மான்றன்றால் மழையே. | உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது.-ஒளவையார்
|
390. மருதம் |
வாளை வாளின் பிறழ, நாளும் |
||
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் |
||
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த |
||
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை |
||
5 |
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ, |
|
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ; |
||
யாணர் ஊரன் காணுநன்ஆயின், |
||
வரையாமைஓ அரிதே; வரையின், |
||
வரைபோல் யானை, வாய்மொழி முடியன் |
||
10 |
வரை வேய் புரையும் நல் தோள் |
|
அளிய-தோழி!-தொலையுந பலவே. | உரை | |
பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம்.-ஒளவையார்
|
394. முல்லை |
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, |
||
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, |
||
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப, |
||
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், |
||
5 |
வன் பரல் முரம்பின், நேமி அதிர, |
|
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே; |
||
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின் |
||
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு |
||
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.-ஒளவையார்
|