முகப்பு |
குடவாயிற் கீரத்தனார் |
27. நெய்தல் |
நீயும் யானும், நெருநல், பூவின் |
||
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, |
||
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் |
||
கழி சூழ் கானல் ஆடியது அன்றி, |
||
5 |
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
|
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும் |
||
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு |
||
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் |
||
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, |
||
10 |
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல |
|
சிறு பாசடைய நெய்தல் |
||
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்
|
212. பாலை |
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, |
||
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் |
||
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் |
||
5 |
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் |
|
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின் |
||
வந்தனர்; வாழி-தோழி!-கையதை |
||
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன் |
||
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும், |
||
10 |
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. | உரை |
பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது.-குடவாயிற் கீரத்தனார்
|
379. குறிஞ்சி |
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் |
||
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது, |
||
எரி அகைந்தன்ன வீ ததை இணர |
||
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய |
||
5 |
தேம் பெய் தீம் பால் வௌவலின், கொடிச்சி |
|
எழுது எழில் சிதைய அழுத கண்ணே, |
||
தேர் வண் சோழர் குடந்தைவாயில் |
||
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த, |
||
பெயல் உறு நீலம் போன்றன விரலே, |
||
10 |
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, |
|
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் |
||
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த |
||
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே. | உரை | |
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-குடவாயிற் கீரத்தனார்
|