முகப்பு |
சீத்தலைச் சாத்தனார் |
36. குறிஞ்சி |
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை, |
||
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி, |
||
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம் |
||
கல்லக வெற்பன் சொல்லின் தேறி, |
||
5 |
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, |
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி, |
||
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து, |
||
ஆனாக் கௌவைத்துஆக, |
||
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே? | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.- சீத்தலைச்சாத்தனார்
|
127. நெய்தல் |
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை |
||
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து, |
||
உவன் வரின், எவனோ?-பாண!-பேதை |
||
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த |
||
5 |
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், |
|
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய |
||
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும், |
||
'மெல்லம் புலம்பன் அன்றியும், |
||
செல்வாம்' என்னும், 'கானலானே'. | உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-சீத்தலைச் சாத்தனார்
|
339. குறிஞ்சி |
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்; |
||
அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும் |
||
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி, |
||
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் |
||
5 |
அறிந்தனள்போலும், அன்னை-சிறந்த |
|
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி, |
||
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் |
||
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ, |
||
மின் நேர் ஓதி இவளொடு, நாளை, |
||
10 |
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் |
|
தெண் நீர் மணிச் சுனை ஆடின், |
||
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே? | உரை | |
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.-சீத்தலைச் சாத்தனார்
|