முகப்பு |
நம்பிகுட்டுவனார் |
145. நெய்தல் |
இருங் கழி பொருத ஈர வெண் மணல் |
||
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி |
||
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் |
||
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை |
||
5 |
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு |
|
புணர்ந்தனன் போல உணரக் கூறி, |
||
'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை; |
||
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம் |
||
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல, |
||
10 |
நள்ளென் கங்குலும், வருமரோ- |
|
அம்ம வாழி!-தோழி அவர் தேர் மணிக் குரலே! | உரை | |
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது.-நம்பி குட்டுவன்
|
236. குறிஞ்சி |
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும் |
||
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே- |
||
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென |
||
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என, |
||
5 |
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு |
|
உரை, இனி-வாழி, தோழி!-புரை இல் |
||
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து |
||
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென |
||
வியல் அறை மூழ்கிய வளி என் |
||
10 |
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. | உரை |
தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.-நம்பி குட்டுவன்
|
345. நெய்தல் |
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய் |
||
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென, |
||
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல், |
||
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன, |
||
5 |
வெளிய விரியும் துறைவ! என்றும், |
|
அளிய பெரிய கேண்மை நும் போல், |
||
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் |
||
தேறா நெஞ்சம் கையறுபு வாட, |
||
நீடின்று விரும்பார் ஆயின், |
||
10 |
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே! | உரை |
தெளிவிடை விலங்கியது.-நம்பி குட்டுவனார்
|