முகப்பு |
பெருவழுதி |
55. குறிஞ்சி |
ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை |
||
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி, |
||
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள் |
||
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு |
||
5 |
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின், |
|
கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும் |
||
இனையையோ?' என வினவினள், யாயே; |
||
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து, |
||
என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!- |
||
10 |
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த |
|
சாந்த ஞெகிழி காட்டி- |
||
ஈங்கு ஆயினவால்' என்றிசின் யானே. | உரை | |
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது.-பெருவழுதி
|
56. பாலை |
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ |
||
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய, |
||
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை, |
||
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் |
||
5 |
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, |
|
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ |
||
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து, |
||
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, |
||
'ஏதிலாட்டி இவள்' எனப் |
||
10 |
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே | உரை |
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.-பெருவழுதி
|