முகப்பு |
கண்டார் |
2. பாலை |
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, |
||
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, |
||
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த |
||
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, |
||
5 |
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, |
|
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; |
||
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று |
||
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், |
||
காலொடு பட்ட மாரி |
||
10 |
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! |
உரை |
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்
|
394. முல்லை |
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, |
||
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, |
||
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப, |
||
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், |
||
5 |
வன் பரல் முரம்பின், நேமி அதிர, |
|
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே; |
||
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின் |
||
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு |
||
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? |
உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.-ஒளவையார்
|