முகப்பு |
நெய்தல் |
275. நெய்தல் |
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக் |
||
காணார் முதலொடு போந்தென, பூவே |
||
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் |
||
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல, |
||
5 |
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் |
|
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு |
||
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து, |
||
அறனிலாளன் புகழ, எற் |
||
பெறினும், வல்லேன்மன்-தோழி!-யானே. | உரை | |
சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது.-அம்மூவனார்
|
349. நெய்தல் |
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும், |
||
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும், |
||
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், |
||
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு |
||
5 |
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் |
|
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை, |
||
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத |
||
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல, |
||
பின்னிலை முனியா நம்வயின், |
||
10 |
என் என நினையும்கொல், பரதவர் மகளே? | உரை |
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.- மிளை கிழான் நல்வேட்டனார்
|