முகப்பு |
குரவம் |
56. பாலை |
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ |
||
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய, |
||
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை, |
||
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் |
||
5 |
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, |
|
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ |
||
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து, |
||
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, |
||
'ஏதிலாட்டி இவள்' எனப் |
||
10 |
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே | உரை |
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.-பெருவழுதி
|
266. முல்லை |
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த |
||
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ |
||
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் |
||
அகலுள் ஆங்கண் சீறூரேமே; |
||
5 |
அதுவே சாலும் காமம்; அன்றியும், |
|
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று |
||
கூறுவல்-வாழியர், ஐய!-வேறுபட்டு |
||
இரீஇய காலை இரியின், |
||
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே? | உரை | |
தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம்.-கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
|