முகப்பு |
கூதளம் |
244. குறிஞ்சி |
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல், |
||
கூதிர்க் கூதளத்து அலரி நாறும் |
||
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் |
||
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் |
||
5 |
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- |
|
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய் |
||
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ- |
||
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!- |
||
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த |
||
10 |
செயலை அம் தளிர் அன்ன, என் |
|
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே. | உரை | |
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்
|
313. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ, |
||
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப, |
||
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து, |
||
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ, |
||
5 |
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு |
|
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள் |
||
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் |
||
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின் |
||
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து |
||
10 |
அருவியின் ஒலித்தல் ஆனா, |
|
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
|
376. குறிஞ்சி |
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
||
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
||
வரையோன் வண்மை போல, பல உடன் |
||
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
||
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
||
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
||
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
||
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
||
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
||
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? | உரை | |
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|