முகப்பு |
தாமரை |
1. குறிஞ்சி |
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்; |
||
என்றும் என் தோள் பிரிபு அறியலரே' |
||
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் |
||
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, |
||
5 |
புரைய மன்ற, புரையோர் கேண்மை; |
|
நீர் இன்று அமையா உலகம் போலத் |
||
தம் இன்று அமையா நம் நயந்தருளி, |
||
நறு நுதல் பசத்தல் அஞ்சிச் |
||
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! | உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்
|
260. மருதம் |
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை |
||
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ, |
||
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது |
||
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! |
||
5 |
வெய்யை போல முயங்குதி: முனை எழத் |
|
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் |
||
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என் |
||
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த |
||
முகை அவிழ் கோதை வாட்டிய |
||
10 |
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! | உரை |
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.-பரணர்
|
300. மருதம் |
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் |
||
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, |
||
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல் |
||
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்- |
||
5 |
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் |
|
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! |
||
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, |
||
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் |
||
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் |
||
10 |
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், |
|
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் |
||
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. | உரை | |
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு - பரணர்
|
310. மருதம் |
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க, |
||
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் |
||
வாளை பிறழும் ஊரற்கு, நாளை |
||
5 |
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! |
|
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி |
||
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன் |
||
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை, |
||
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை |
||
10 |
வள் உயிர்த் தண்ணுமை போல, |
|
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே? | உரை | |
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்
|