முகப்பு |
குருவி |
58. நெய்தல் |
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர் |
||
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் |
||
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல, |
||
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ- |
||
5 |
வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
|
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் |
||
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப, |
||
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து, |
||
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை |
||
10 |
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் |
|
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே! | உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.- முதுகூற்றனார்
|
181. முல்லை |
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் |
||
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, |
||
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை |
||
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
||
5 |
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
|
துவலையின் நனைந்த புறத்தது அயலது |
||
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, |
||
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, |
||
கையற வந்த மையல் மாலை |
||
10 |
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
|
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப |
||
வந்தன்று, பெருவிறல் தேரே; |
||
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. | உரை | |
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
|
231. நெய்தல் |
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் |
||
கைதொழும் மரபின் எழு மீன் போல, |
||
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய, |
||
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும் |
||
5 |
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும், |
|
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன, |
||
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக் |
||
கானல்அம் கொண்கன் தந்த |
||
காதல் நம்மொடு நீங்காமாறே. | உரை | |
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்
|