முகப்பு |
வாவல் |
87. நெய்தல் |
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் |
||
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், |
||
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு |
||
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, |
||
5 |
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப் |
|
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை |
||
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் |
||
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும், |
||
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்
|
218. நெய்தல் |
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே; |
||
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே; |
||
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும் |
||
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்; |
||
5 |
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர் |
|
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய |
||
பராரை வேம்பின் படு சினை இருந்த |
||
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்; |
||
ஆனா நோய் அட வருந்தி, இன்னும் |
||
10 |
தமியேன் கேட்குவென் கொல்லோ, |
|
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே? | உரை | |
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக் கீரங்கண்ணனார்
|
279. பாலை |
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத் |
||
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, |
||
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், |
||
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப, |
||
5 |
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு |
|
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப, |
||
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை |
||
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, |
||
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச் |
||
10 |
சிலம்பு கழீஇய செல்வம் |
|
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே? | உரை | |
மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்
|