முகப்பு |
ஆலங்குடி வங்கனார் |
8. மருதம் |
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் |
||
பழன வாளை கதூஉம் ஊரன் |
||
எம் இல் பெருமொழி கூறி, தம் இல், |
||
கையும் காலும் தூக்கத் தூக்கும் |
||
ஆடிப் பாவை போல, |
||
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. |
உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார். |
45. மருதம் |
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி, |
||
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற |
||
மல்லல் ஊரன், 'எல்லினன் பெரிது' என, |
||
மறுவரும் சிறுவன் தாயே; |
உரை | |
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே. |
||
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது.- ஆலங்குடி வங்கனார் |