முகப்பு |
பெருங்கண்ணனார் |
289. முல்லை |
வளர்பிறை போல வழிவழிப் பெருகி, |
||
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு |
||
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய், |
||
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும், |
||
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே; |
||
பட்ட மாரி படாஅக்கண்ணும், |
||
அவர் திறத்து இரங்கும் நம்மினும், |
||
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
'காலம் கண்டு வேறுபட்டாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், 'கொடியர்' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்'என்று, தலைமகள் சொல்லியது |
310. நெய்தல் |
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; |
||
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும், |
||
நம்மே போலும் மம்மர்த்து ஆகி, |
||
எல்லை கழியப் புல்லென்றன்றே; |
||
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை |
||
தண்ணிய கமழும் ஞாழல் |
||
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே. |
உரை | |
வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன் |