முகப்பு |
வாயிலான் தேவன் |
103 நெய்தல் |
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், |
||
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய், |
||
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத் |
||
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும் |
||
வாரார் போல்வர், நம் காதலர்; |
||
வாழேன் போல்வல்-தோழி!-யானே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன் |
108. முல்லை |
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் |
||
கறவை கன்றுவயின் படர, புறவில் |
||
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் |
||
செவ் வான் செவ்வி கொண்டன்று; |
||
உய்யேன் போல்வல்-தோழி!-யானே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன் |