| ஞெமர் - பரந்த | 7-69 |
| ஞெமர்ந்த - பரவிய | 8-94 |
| " - வீற்றிருந்த | 1-8 |
| ஞெமல் - திரியும் | 8-44 |
| ஞெமை - ஒருமரம் | 12-5 |
| தகரம் - ஒருமணப் பொருள் | 12-97 |
| " - ஒருமரம் | 12-6 |
| தகவு - கற்பு | 20-88 |
| தகை - தகுதி | 6-29 |
| தகைத்து - தன்மைத்து | 11-60 |
| தகையினான் - தகுதியுடையான் | 7-51 |
| தக்காய் - நீ தகுதியுடையை | 11-115 |
| தடவு - யாககுண்டம் | 5-42 |
| தடாகம் - குளம் | 9-77 |
| தடாரி - ஓரிசைக் கருவி | 12-41 |
| தடி - தசை | 4-21 |
| தடித்த - துணித்த | 4-21 |
| தடையிறந்து - தடையைக் கடந்து | 10-37 |
| தட்ப - தடுப்ப | 21-20 |
| தணந்தோர் - பிரிந்தோர் | 14-8 |
| தணப்பு - பிரிவு | 20-108 |
| தணி - குளிர்ந்த |
6-29; 9-11 |
| தண் - குளிர்ந்த | 3-55 |
| தண்டம் - படை | 10-60 |
| தண்டா - தவிராத | 6-36 |
| தண்டாது - குளிர்ந்த மகரந்தம் | 10-101 |
| தண்டாரவர் - ஆடவர் | 7-44 |
| தண்டி - தாவி | 10-100 |
| தண்டு - வாழைத்தண்டு | 11-106 |
| தண்ணம் புனல் - குளிர்ந்த அழகிய நீர் | 6-10 |
| தண்ணுமை - ஓரிசைக் கருவி | 12-41 |
| தண்பெயல் - குளிர்ந்த மழை | 2-9 |
| தண்மை - அறம் | 4-50 |
| " - குளிர்ச்சி | 4-25 |
| ததர் - உதிர்ந்த | 12-3 |
| ததும்பும் - நிறைந்த | 18-31 |
| தந்தார் - பெற்றோர் | 15-46 |
| தபுத்த - கொன்ற | 5-7 |
| தமர் - சுற்றத்தார் | 9-67 |
| தமனியம் - பொன் | 8-114 |
| தமிழ்வையை - தமிழ்வளர்தற்குக் காரணமான வையை | 6-60 |
| தம்முன் - தமையன் | 15-19 |
| தரிக்கென - தாங்குக என்று | 5-40 |
| தரு - மரம் | 18-22 |
| தருக்கு - மேம்படு | 20-78 |
| தருமன் - இயமன் | 3-8 |
| தலை - தலைவன் | 9-2 |
| தலைஇ - தலைப்பட்டு | 10-61 |
| தலைஇய - பெய்த | 2-9 |
| தலைஇயென - பெய்தாற் போல | 9-10 |
| தலைதொட்டேன் - தலையைத் தொட்டு ஆணையிட்டேன் | 6-65 |
| தலைத்தலை - இடந்தோறும் | 12-31;
16-10 |
| தலைமேலது - சூட்டு | 4-45 |
| தலையன - தலையிடத்தன | 4-46 |
| தலையின்று - பெய்தது | 9-11 |
| தலைவ - இறைவனே | 5-14 |
| தவிர்பு - தவிர்ந்து | 6-2 |
| தழுவா - தழுவி | 11-106 |
| தளி - மழை | 8-91;
12-3 |
| தனிநிலை - ஒப்பற்ற | 9-6 |
தா | |
| தாஅய் - தாவி; பரந்து | 7-11; 12-3 |
| தாக்கணங்கு - தீண்டிவருத்தும் தெய்வம் | 11-122 |
| தாக்கி - அடித்து | 8-88 |
| தாக்கியது - போரிட்டது | 6-57 |
| தாக்கிரை - எறிந்தெடுக்கும் இரை | 4-48 |
| தாங்கி - தடுத்து | 11-112 |
| தாங்குதடை - தடுக்கும் தடை | 7/19 |
| தாட்டாமரை - காலாகிய தாமரை | 8-114 |
| தாதுண்பறவை - வண்டு (ப-தி) | 7-6 |
| தாதை - தந்தை | 1-28 |
| " - திருமால் | 3-13 |
| தாமம் - மாலை | 7-84 |
| தாமரையிறை - நான்முகன் | 9-4 |
| தாமா - அசுவினிதேவர் | 3-8 |
| தாய - படர்ந்த | 11-21 |
| தாயிற்று - பரவியது | 6-10 |
| தாரகை - விண்மீன் | 19-19 |
| தாரம் - தேவதாரு | 12-6 |
| தாரர் - தூசித்தன்மையுடையோர் | 6-31 |