| நாழி - அம்புத்தூணி | 18-30 |
| நாளணி - சிறப்பணி | 6-12 |
| நாளின் நாளின் - நாளுக்குநாள் | 11-31 |
| நாள் - நாட்காலை | 9-20 |
| நாறிணர் - மணங்கமழும் பூங்கொத்து | 4-58 |
| நாறு - மணம் | 8-99 |
| நாறுதி - மணக்கின்றனை | 8-47 |
| நாறுபு - மணந்து | 6-42 |
| நாற்றம் - தோற்றம் | 1-46 |
| நாற்றம் - மணம் |
3-63; 4-29; 13-14 |
| நான்கு - ஓசையும் ஊறும் ஒளியும் சுவையும் |
3-78; 13-21 |
| நான்கு - மைத்திரி கருணை முதிதை இகழ்ச்சி | 4-1 |
| நான்மறை - நான்கு வேதம் | 9-12 |
| நான்மாடக் கூடனகர் - மதுரை (ப-தி) | 6-4 |
| நிகர் மலர் - புதிய மலர் | 9-4 |
| நிகழும் - செல்லுகின்ற | 6-42 |
| நிணந்தவை - தெற்றினமாலை | 19-80 |
| நித்தம் - நிருத்தம்; கூத்து | 11-43 |
| நித்திலமதாணி - ஒருவகை அணிகலன் | 2-30 |
| நித்திலம் - முத்து | 2-29 |
| நிரைநிரை - வரிசை வரிசையாக | 6-26 |
| நிரையிதழ் - நிரல்பட்ட இதழ் | 4-60 |
| நிரைவளை: அன்மொழித்தொகை; தலைவி. | 8-89 |
| நிலத்தூழி - நிலந்தோன்றிய ஐந்தாம் ஊழி | 2-12 |
| நிலத்தோர் - மானிடர் | 19-4 |
| நிலவரை - நிலப்பரப்பு | 10-3 |
| நில் - ஒழி | 8-49 |
| நில்லிகா - நில் | 11-104 |
| நிவந்தோங்கு - மிகவுயர்ந்த |
3-17; 5-48 |
| நிவப்பு - நிமிர்ச்சி | 7-7 |
| நிழத்த - அழிக்க | 6-19 |
| நிழத்த - சுருங்க | 10-3 |
| நிழலவை - நிழலினையுடையை |
1-55; 13-47 |
| நிழல்காண் மண்டிலம் - கண்ணாடி | 21-23 |
| நிறத்தகை - நிறவழகு | 5-12 |
| நிறன் - நிறம் | 2-51 |
| நிறை - கற்புடைமை |
5-39; 6-20 |
| நிறை - வெள்ளம் | 11-140 |
| நிறைகுறை - ஆளத்தித் தொழில்கள் | 17-18 |
| நிறைந்தன்று - நிறைந்தது | 12-93 |
| நிறைமதி - முழுத்திங்கள் |
3-52; 11-13 |
| நிறையுவா - பூரணை | 11-37 |
| நிறைவயின் வழாஅது - கற்பிற் பிறழாமல் | 5-47 |
| நிற்சூலினர் - நின்னைச் சூலித்தே கொண்டார் | 5-47 |
| நிற்படிந்து - நிற்பாற்றோய்ந்து | 7-86 |
| நிற்பயம் - நினது பயன் | 7-85 |
| நிற்பாடுவோர் - நின்னைப் பாடுவோர் | 3-28 |
| நிற்பிரிந்து - நின்னைப்பிரிந்து | 4-34 |
| நினைஇ - நினைந்து | 13-61 |
| நின்வயின் - நின்னிடத்து | 1-33 |
| நின்றன்று - நின்றது | 9-78 |
| நின்றுழி - நின்றவிடத்தே | 11-109 |
| நின்னஞ்சி - நினக்கு அஞ்சி | 3-55 |
| நின்னது - நினது | 2-52 |
| நின்னிலை - நின்னிடத்து | 2-26 |
| நின்னில் - நில்லு நில்லு; பொறு பொறு. | 8-56 |
| நின்னிழல் - நினது திருவடிநிழல் | 5-77 |
| நின்னிற் சிறந்த - நின்னையுங் காட்டில் சிறந்த | 4-62 |
| நின்னீன்ற - நின்னைப்பெற்ற | 8-13 |
| நின்னொடுபுரைய - நின்பெருமைக் கேற்ப | 2-67 |
| நின்னோரனைய - நின்னையே ஒப்பாய் | 1-54 |
| நின்னோரன்னோர் - நின்னை யொத்தவர் | 4-65 |
| நீகான் - மீகான்; மரக்கலம் ஓட்டுகின்றவன் | 10-55 |
| நீங்குவான் - நீக்குவதற்கு | 7-47 |
| நீடன்மின் - காலம் நீட்டியாதே கொண்மின் | 14-9 |
| நீத்தம் - ஆழ்ந்த இடம் | 11-53 |
| " - வெள்ளம் | 12-34 |