20 ஆசிரியர்கள் வரலாறு


மதுரைமருத னென்று கூறி இவரை மதுரை மருத னிளநாகனாரென்று கூறுவாராயினர். அவ்வாறாயின் ஊர்ப் பெயரைமட்டும் முன்வைத்து வெள்ளைக்குடி நாகனா ரென்றாற்போல மதுரை இளநாகனா ரென்றல் சாலாதோவெனின், மதுரையின் கண்ணே இளநாகனாரென மற்றுமொருவர் இருந்தமையின் அது சாலாதென்று அவரை மதுரைப் பூதனிள நாகனா ரென்றும் இவரை மதுரை மருதனிளநாகனா ரென்றும் வழங்கினரென்று தோன்றுகிறது. மதுரைப் பெருமருதிளநாகனா ரென்பதும் இவரது பெயராயிருப்பினும் இருக்கலாம். இளநாகனா ரென்பதற்கு முன் நிறுத்திய ‘மருதன்’ ‘மதுரை மருதன்’ ‘மதுரைப் பெருமருது’ என்னும் அடைமொழிகள், அவர் மூவரென்பதை அறிவிக்கவே வந்தன என்று கொள்ளுவாரு முளர். இக்கொள்கையிரண்டுக்கும் யுக்தி கூறி அமைக்கலா மாதலின், அவரவர் உள்ளத்தாற் றுணிந்ததே முடிவென்க. மதுரைப் பெருமருதிளநாகனாரென்பது மற்றொருவரைக் குறிப்பதாயினும் மருத னிளநாகனாரென்பதும் மதுரை மருதனிளநாகனா ரென்பதும் ஒருவரையே குறிப்பன வென்பது என் கருத்து. சிலர் ஒருகால் இவ்விதமாகவும் மற்றொருகால் மற்றொரு விதமாகவும் வரைந்துள்ளார். அதற்குக் காரணங் குறிப்பிடவில்லை.

இவர் சிலபெருமானையும் முருகக் கடவுளையும் பல இடத்துப் புகழ்தலால் இவரைச் சைவ சமயத்தவ ரென்னலாம். இவர் தேசாபிமானம் பாஷாபிமானம் தெய்வபக்தி முதலிய நற்குணங்களும் அவ்வழிப்பட்ட புலவர்பால் மிக்க மதிப்பு முடையவர் :-

"கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலம்
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்
னீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார்
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்’’ -கலி. 67.
"கதிர்விரியா வைகலிற் கைவாரூஉக் கொண்ட
மதுரைப் பெருமுற்றம் போல’’. -கலி. 96.
"வல்லவர், செதுமொழி சீத்த செவிசெறு வாக 
முதுமொழி நீராப் புலனா வுழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர’’. -கலி. 68.
"ஈரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச்
சூர்கொன்ற செவ்வேலாற் பாடி’’. -கலி. 93.