3. மருதனிள நாகனார். 21

"தாழ்நீர் வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்றுறை’’. -புறம். 55 : 19 - 21.
"சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற் 
சீர்மிகு முருகன் றண்பரங் குன்றத் 
தந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை
யின்றீம் பைஞ்சுனை யீரணிப் பொலிந்த
தண்ணறுங் கழுநீர்’’. -அகம். 59 : 10 - 14. 

இவற்றில் வையையாறு, மதுரை, திருப்பரங்குன்று, திருச்செந்தூர் முதலியவற்றைச் சிறப்பித்தலால் இவர் தேசாபிமானமும் புலவர்களுடைய புதுமொழி கூட்டுண்ணுதலை நன்கு எடுத்துரைத்தலால் இவரது பாஷாபிமானமும் முருகக் கடவுளைப் புகழ்ந்து கூறுதலால் இவருடைய தெய்வபத்தியும் திருப்பரங்குன்றை நல்லந்துவனார் பாடியதென்று
பாராட்டுதலால் அப்புலவர்பால் இவருக்குள்ள பெரு மதிப்பும் நன்கு புலனாகும்.

இவர், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் நாஞ்சில் வள்ளுவனையும் சேரசேனாதிபதி பிட்டனையும், கழுவுளையும் பாடியிருக்கிறார்.

இந்நூலில் 35ம் நற்றிணையில் 12ம் குறுந் தொகையில் 4ம் அகநானூற்றில் 23ம் ஆகக் காணப்படும் இவருடைய பாடல்களால் இவர் அகனைந்திணையையும் புனைந்து பாடுதலில் வல்லவ ரென்பதும் புறநானூற்றிற் காணப்படும் 3 பாடல்களாலும் இவர் புறத்திணையையும் புனைந்துபாடும் ஆற்றலுடையவ ரென்பதும் விளங்கும்.

பிறிதொன்றாலும் அறியப்படாத அரிய பொருள்கள் சிலவும் இவர் பாடலால் அறியப்படுகின்றன. அவையாவன :-

1. பிள்ளைப்பணி :

"பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி ஈரிடைத் தாழ்ந்த
பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின்
மையற விளங்கிய ஆனேற்றுஅவிர் பூண்’’. -கலி. 85.
"பொலஞ்செய் மழுவொடு வாளணி கொண்ட
நலங்கிள ரொண்பூண் நனைத்தரும் அவ்வாய்’’. -கலி. 86.
"தொடக்கத்துத் தாயுழை புக்காற்கு அவளும்
மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து’’. -கலி. 82.

இப் பாடல்களால் இளம்பிள்ளைகளுக்கு வைணவமாகிய ஐம்படைத் தாலியேயன்றிச் சைவமாகிய தாலிஒன்று மார்பில் அணிவ