10 ஆசிரியர்கள் வரலாறு


என்னலாம். இவரது பெயர் 1பாலைபாடிய பெருங்கடுங்கோ என்றே பல இடத்தும் உள்ளது. கலி 2(2) 4-8, (4) 3-6, (5) 1-3, (6) 1-6, (7) 1-3, (8) 2-6, (10) 1-7, (11) 6-7, (12) 1-7, (13) 1-9, 12-13, 20-21, (15) 1-9, (16) 6-8, 10-12, 14-16, (20) 1-8, 20-21, (23) 3, (24) 10-11, (25) 9-11, இப்பகுதிகளில், இவர் பாலைத்திணையைப் புனைந்துரைத்திருத்தலை நோக்குக.

மற்றும் இவர் பாடியனவாக அகப்பொருட் செய்யுட்களுள், நற்றிணையில் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391) பத்தும் குறுந்தொகையில் (16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398) பத்தும் அகநானூற்றில் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379) பன்னிரண்டும் ஆக 3 32 ஆசிரியப்பாக்கள் உள்ளன. அவற்றுள் இரண்டொன்று ஐயத்துக்கிடமா யிருப்பினும் மற்றவையெல்லாம் பாலைத்திணைக்குரியவையே. அவற்றுள்ளும் நற் (48) 3-9, (256) 3-4, 9-11; (318) (384) 1-6. குறுந்(124) (283) 5-8. அகம் (5) 8-15; (99) (111) 4-15; (155) 7-16; (185) 5-13. (223) 3-8; (261) (267) 5-13; (291) 1-21: (313) 11-17; (337) 5-18; (379) 18-26 இந்தப் பகுதிகளில் பாலைத் திணையைப் புனைந்துரைத்திருத்தல் நோக்கற் பாலது.

‘பாலைபாடிய’ என்னும் இவ்வடைமொழியின் முன் ‘சேரமான்’ என்னும் குடிப்பெயர் சேர்க்கப்பெற்று, ‘சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ’ என்று புறநானூறு 11 ஆம் செய்யுளின் பின் இன்ன தலைவரை இன்னவர்பாடியது என்புழிக்காணப்படுகின்றது. அச்செய்யுள் சேர வேந்தனையே தலைவனாகக்கொண்


1. ஒவ்வொன்றைச் சிறப்பித்துப் பாடியதனால் சிலர் பாராட்டப் பெற்றாரென்பது, மருதம் பாடிய இளங்கடுங்கோ, மடல் பாடிய மாதங்கீரனார், வெறி பாடிய காமக் கண்ணியார். கொடை பாடிய அல்லது கோடை பாடிய பெரும்பூதனார் என்பவற்றாலும் நோய் பாடியார் அல்லது நொய் பாடியார் என்பதனாலும் அறியப்படுகின்றது.

2 ( ) இந்நகவளைவி னுட்பட்ட எண்கள் பாடல்களையும் பின்னுள்ள எண்கள் அடிகளையும் குறிப்பன.

3 புறப்பொருளிலும் ஓர் ஆசிரியப்பா உண்டு; புறம்-282.