|
1. பாலைபாடிய பெருங்கடுங்கோ |
11 |
|
டிருப்பது. அச்செய்யுளும் அதன் பின்னுள்ள குறிப்புமே இவர் சேரர்குடிக் குரியோரென்பதை அறியக் கருவியாயிருக்கின்றன. இவரை அப்பாடலாற் புகழ்ந்தவர் பெயர் ‘பேய்மகள் இளவெயினி’ என்று பதிப்பிக்கப்பெற்றுள்ளது. அந்நூலுரையாசிரியர் அப்பாடலுக்குப் பொருளெழுதிய பின் ‘பாடினி இழை பெற்றாள்; பாணன் பூப்பெற்றான்; யான் அது பெறுகின்றிலேனெனப்பரிசில் கடா நிலையாயிற்று’ எனத் துறைச்செய்தியைத் தம் கோட்பாடாக விளக்கிவிட்டு, “இனி இவள் பேயாயிருக்கக் கட்புலனாயதோர் வடிவு கொண்டு பாடினாளொருத்தி யெனவும், ‘இக்களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோடு எதிர்ந்து பட்டோரில்லாமையால் எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன்’ எனத்தான் பேய்மக ளானமை தோன்றப் பரிசில்கடாயினாளெனவும் கூறுவாரு முளர்” என்று பிறர் கருத்தையும் எழுதியிருக்கிறார். இப்பிறருரையைப் புனைந்துரையென்று கொள்ளுவதன்றி மெய்யுரையென்று அறிஞர்கொள்ளார். ஆதலின் பின்னுள்ள பிறருரையை விட்டு முன்னுள்ள இவருரையே கொள்ளத்தக்கதாகும். இதில், ‘பாடினி இழைபெற்றாள்; பாணன் பூப்பெற்றான்’ என்பவை, அவர் பரிசில் வாழ்நரென்பதையும் அவர் இவை பெற்றாரென்பதையும் உணர்த்துகின்றன. அவரைப்போலவே இதனைப் பாடியவரும் பரிசில் பெறுதற்குரிய தகுதியினரென்றால் பாட்டின் பொருள் சிறக்கும், அத்தகுதியும் இசைபற்றியதெனின் இன்னும் சிறக்கு மென்பது கூறாமலே விளங்கும். இவர் பெயர் அத்தகுதியின ரென்பதைக்குறிக்கும் பெயரென்றே இப்போது என்னால் ஊகிக்கப்படுகின்றது. அஃது என்னெனின், ‘இளவெயினி’ என்பதை ‘இளவேயிளி’ என்று கொள்ளுதலே, கொண்டால் அது குறிப்புமொழியாகி, புல்லாங்குழலாகிய இளவேயால் பஞ்சம ஸ்வரமாகிய இளியென்னும் இசையைச் சுவைபட வாசித்தலிற் சிறந்தவளெனப் பொருள்பட்டு இசைத்திறத்தால் பரிசில் பெறுதற்குரியளெனப் பொருள் சிறக்கும். ஏட்டுச்சுவடிகளில் ‘இளவேயிளி’ என்பது ‘இளவெயினி’ யென்றும்படிக்கும்படி வேறுபாடுவிளங்காதிருக்குமென்பது ஏடாள்வார்க்குத் தெரியாததொன்றன்று. ஆதலால் யான் ஊகிப்பதை அறிஞர் நுண்ணிதினாராய்ந்து பொருந்து
|